School Holiday: 3 நாட்கள் தொடர் விடுமுறை.. மாணவர்கள் குஷி.. அரசு போக்குவரத்துக்கழகம் குட்நியூஸ்!

Published : Sep 10, 2026, 07:29 AM ISTUpdated : Sep 10, 2026, 07:30 AM IST

School Holiday: விநாயகர் சதுர்த்தி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது குறித்த முழு விவரங்களை பார்ப்போம்.

PREV
14
விநாயகர் சதுர்த்தி; 3 நாட்கள் தொடர் விடுமுறை

விநாயகப் பெருமானை சிறப்பிக்கும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை செப்டம்பர் 14 ஆம் தேதி (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 12/09/2026 [சனிக்கிழமை], 13/09/2026 (ஞாயிற்றுக்கிழமை முகூர்த்தம்) 14/09/2026 [விநாயகர் சதுர்த்தி) என 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இந்த நாட்களில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை நாட்களாகும்.

இந்த நிலையில், 10/09/2026 வியாழக்கிழமையான இன்று, 11/09/2026(வெள்ளிக்கிழமையான நாளை, 12/09/2026 [சனிக்கிழமை], 13/09/2026 (ஞாயிற்றுக்கிழமை முகூர்த்தம்) 14/09/2026 [விநாயகர் சதுர்த்தி) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழநாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

24
விடுமுறை சிறப்பு பேருந்துகள்

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதாவது சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 10/09/2026 (வியாழக்கிழமை) அன்று 585 பேருந்துகளும் 11/09/2026 (வெள்ளிக்கிழமை) அன்று 1255 பேருந்துகளும், 12/09/2026 (சனிக்கிழமை) அன்று 1030 பேருந்துகளும் 13/09/2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 650 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

34
பெங்களூரு, கோவை

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 11/09/2026 வெள்ளிக்கிழமை அன்று 240 பேருந்துகளும், 12/09/2026 சனிக்கிழமை அன்று 240 एं, 13/09/2026 ஞாயிற்றுக்கிழமை அன்று 105 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து 11/09/2026 ប្រល់ 13/09/2026 வரையிலான நாட்களில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 110 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

44
எப்படி முன்பதிவு செய்வது?

மேலும், திங்கள் அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 14/09/2026 (திங்கட்கிழமை) அன்று 765 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வியாழக்கிழமை அன்று 8666 பயணிகளும் வெள்ளிக்கிழமை அன்று 32171 பயணிகளும் சனிக்கிழமை 18772 பயணிகளும், ஞாயிறு அன்று 11177 மற்றும் திங்கள் அன்று 23740 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு WW-w.tnstc.in மற்றும் TNSTC Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தை இனிதாக்கி கொள்ளலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories