
எட்டு மாதங்களுக்கு முன்பு டிவிகே அதாவது தமிழக வெற்றிக் கழகம் (TVK) என்ற தனது கட்சியைத் தொடங்கிய நடிகர் தளபதி விஜய், தன்னுடைய முதல் மாநாட்டில் ஆளும் கட்சியான பாஜக மற்றும் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசி அரசியல் களத்தில் பரபரப்பை உண்டாக்கி உள்ளார். தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் தொடக்கமாக 100 அடி உயரத்தில் நிறுவப்பட்ட கொடியை ரிமோட் மூலம் ஏற்றி வைத்தார் நடிகர் விஜய். பின்னர் தனது பெற்றோரின் ஆசிகளை பெற்றுவிட்டு, பேச தொடங்கினார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். அப்போது பேசிய விஜய், “ஒரு குழந்தை முதலில் 'அம்மா' என்று சொல்லும் தருணத்தில் அந்த அம்மாவுக்கு உள்ளே எழும் அதிர்ச்சி உணர்ச்சியை பாருங்கள்.
அந்த உணர்வு சொல்லித் தெரியாது. ஆனால் அந்த உணர்வு போன்றதொரு உணர்வோடு நான் இங்கு நிற்கிறேன். அரசியலின் பாதையில் பயணிக்க, நாம் சந்திக்கும் சவால்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் முன்னேற்பாடு அவசியம். அரசியல் என்பது மிக நுட்பமாகவும் சீரியசாகவும் இருக்க வேண்டிய மைதானம் ஆகும். அண்ணாவின் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கொள்கை நமது அடிப்படை ஆகும். அதில் அடங்கும் பெண் கல்வி, சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் முன்னேற வேண்டும் என்ற நோக்கம் போன்ற கொள்கைகளையே நாங்கள் கொண்டு வரப்போகிறோம். மதச்சார்பின்மைக்கும், சமூகநீதி நிலைநிறுத்தும் வகையில் பெரியாரின் பாணியில் முன்னேற்றம் செய்வதுதான் எங்கள் நோக்கம்.
பெண்களையும், அவர்கள் வீரத்தை முன்வைத்து வழிகாட்டியாக ஏற்றுக்கொள்கிறோம். வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோர் அவ்வாறு வழிகாட்டுகிறார்கள் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை, வழிகாட்டியை பற்றி விரிவாக கூறினார் விஜய். அப்போது அவர் சொன்ன குட்டி ஸ்டோரி தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது. தளபதி விஜய் சொன்ன அந்த குட்டி கதை ஆனது, ஒரு நாட்டில் ஒரு போர் உருவானது. அப்போது, நாட்டின் தலைமை பதவியில் ஒரு திறமையான தலைவன் இல்லாமல் போனதால், சின்ன வயது ஒரு பையனின் கையில் தான் பொறுப்பு வந்தது. இதனால் நாட்டின் பெரும் தலைவர்கள் அனைவரும் மனதளவில் குழப்பத்தில் இருந்தனர். அந்தப் பையன் தன்னுடைய பின்தள படையை திரட்டிக் கொண்டு போர்க்களத்திற்குத் தன்னுடைய அர்ப்பணிப்போடு செல்வதாக முடிவு செய்தான்.
அப்போது இருந்த அங்கிருந்த பெரிய தலைவர்கள், "நீ ஒரு சின்ன பையன். இது விளையாட்டு இல்ல. போர்க்களம். எதிரி அணி பலத்துடன் இருக்கும். அவர்களை நேரில் சந்திப்பது, தாங்குவதும் சுலபமல்ல. போரில் வெற்றி பெறுவது மிகப் பெரிய சவால்" என கேட்டனர். ஆனால், அந்தச் சிறுவன் எவ்வித பதிலும் அளிக்காமல், தன் மனவுறுதி மற்றும் பாண்டிய வம்சத்தை சார்ந்த வீரத்துடனும், தனக்கே உரிய தன்னம்பிக்கையுடன் தனது படையோடு போர்க்களம் நோக்கி புறப்பட்டான். சங்க இலக்கியம் இதற்கான சம்பவத்தை தெளிவாக சொல்லுகிறது. இதை படிக்காதவர்கள் அந்நூலை வாசித்து தெரிந்து கொள்ளவும்.
படித்தவர்கள் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும். சிலர் சொல்வார்கள். அந்தப் பையன் சாதாரண பையன் இல்லை. ரொம்ப கெட்ட பையன் சார்” என்று தவெக தலைவர் விஜய் கூறினார். யார்ரா அந்த பையன் என்பது தான் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆக உள்ளது. விஜய் சொன்ன அந்த பையன் வேறுயாருமில்லை, அது தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் தான் விஜய் குறிப்பிட்ட அந்த பையன். நெடுஞ்செழியன் சங்ககாலத்தின் புகழ்மிக்க பாண்டிய மன்னனாக விளங்கியவர்.
தந்தையின் மறைவுக்கு பின்பு சிறுவயதிலேயே ஆட்சிப் பொறுப்பை ஏற்று, தலையாலங்கானத்துப் போரில் தலைசிறந்த வீரராகத் திகழ்ந்தார். அந்தப் போரில் போர்க்களத்தில் செல்லும் போது கூட, குழந்தைகள் அணியும் ஐம்படைத் தாலியை தனது காலில் இருந்தே கழட்டாததைக் கொண்டு அவர் சிறு வயதிலேயே போரில் கலந்து கொண்டது என அறியலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சங்க கால வேந்தர்களின் காலக்கணிப்பில் பல்வேறு கருத்துகள் நிலவினாலும், நெடுஞ்செழியனின் காலத்தை அறிஞர்கள் இரண்டு கோணங்களில் ஆராய்கின்றனர். ஓராண்டு கொள்கையில், இவர் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் மகன் வெற்றிவேற் செழியனின் வாரிசு என நம்பப்படுகிறது.
மேலும், சிலம்பு இலக்கியத்தில் "இளையராயினும் பகையரசு கடியுஞ்செருமாண் தென்னர் குலமுத லாகலின்" என்ற வரிகள் இளமையிலேயே போர்க்களத்தைச் சந்தித்த பாண்டிய மன்னன் தலையாலங்கானத்தில் வெற்றிகொண்டவர் என்ற கருத்துக்கு வலுச்சேர்க்கின்றன என்றே கூறலாம். முனைவர் வ. குருநாதன் ஆராய்ச்சி கூற்றுப்படி, இதே நெடுஞ்செழியன் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனின் இளைய வயதிலேயே மறைந்த பிள்ளை எனவும், அவரது மனைவி பெருங்கோப்பெண்டு உடன்கட்டை ஏறியதாகவும் கூறப்படுகின்றது. இதன் அடிப்படையில், நெடுஞ்செழியன் ஆரியப்படை கடந்த மன்னனுக்கு முன்னோன் எனத் தெரிவிக்கின்றனர். சோழ மன்னர் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேர மன்னர் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, கொங்கு மன்னர் திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகியோர், இளமைக்காலத்தில் இருந்த நெடுஞ்செழியனை "ஆற்றல் இல்லாதவன்" என இகழ்ந்து, சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது தலையாலங்கானத்தில் படையெடுத்தனர்.
ஆனால், நெடுஞ்செழியன் தைரியத்துடன் எதிர்த்து இவர்கள் அனைவரையும் தோற்கடித்தார் என்பது வரலாறு. தமிழகம் முழுதும் இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. தந்தை மதுரையைச் செலுத்தியபோது இவன் கொற்கையில் இளவரசராக இருந்து வந்தார்; தந்தையின் மறைவின் பின்னர் மதுரையில் முடிசூடியார். இவரது ஆட்சிப் பரப்பில் முதுவெள்ளி, பெருங்குளம், நெல்லின் அள்ளூர், சிறுமலை, பொதியில் உள்ளிட்ட பல பகுதிகள் அடங்கியிருந்தன. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பேச்சு ஆளும் கட்சிகளை மட்டுமல்லாமல், தமிழ் இனத்தின் வரலாற்றையும் பேசி உள்ளார்.
"எடுத்து சொன்னா அவர் மாறிவிடுவார்" த.வெ.க தலைவர் விஜயின் ஸ்பீச் - தமிழிசை கொடுத்த ரியாக்ஷன்!