tnpsc
டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள்
ஆண்டு தோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் தமிழக அரசு பணிகளில் இணைய வேண்டும் என இரவு பகல் பாராமல் அரசு பணியாளர் தேர்விற்கு தயாராவார்கள் அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி சார்பாக பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் 8,932 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30ம் தேதி வெளியானது. அதன் படி கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தனி உதவியாளர், கிளார்க் என பல பணிகளுக்கு ஜூன் 9ம் தேதி தமிழகம் முழுவதும் தேர்வு நடைபெற்றது.
tnpsc exams
16 லட்சம் பேர் எழுதிய தேர்வு
தமிழகம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர். 3மாத காலத்திற்குள் குரூப் 4 தேர்வு முடிவுகளை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து அக்டோபர் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
தீபாவளிக்கு முன்னதாக முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு முடிவுகளை எந்த தேதியில் வெளியிடுவது என்பது குறித்து முடிவெடுப்பதற்காக தேர்வாணையத்தின் ஆலோசனை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதனை தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
tnpsc
வெளியானது தேர்வு முடிவுகள்
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், Tamil Nadu Public Service Commission ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IV (தொகுதி-IV பணிகள்) அறிவிக்கை எண்: 01/2024 தேர்வு முடிவுகள் www.tnpscresults.tn.gov.in w www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
இத்தேர்வு முடிவுகள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.