களை கட்டிய தீபாவளி கொண்டாட்டம்
தீபாவளி கொண்டாட்டம் தற்போதே களைகட்ட தொடங்கியுள்ளது. புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் வாங்க அனைத்து கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. மேலும் தீபாவளி கொண்டாட்டம் என்றால் கேட்கவா வேண்டும் அதைவிட தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை கிடைத்தால் விட்டு விடுவார்களா.? தற்போதே பல பிளான்களை மக்கள் போட தொடங்கிவிட்டனர்.
வெளியூரில் இருந்து சென்னை உள்ளிட்ட இடங்களில் படிக்க, வேலை பார்க்க வந்தவர்கள் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில், உறவினர்களோடு கொண்டாட ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு செய்துவிட்டனர். மேலும் தங்களது சொந்த வாகனங்கள் மூலம் இன்று மாலை முதல் புறப்பட தயாராகி வருகின்றனர்.
school holiday
தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை
இந்த நிலையில் தான் இந்த ஆண்டு தீபாவளி வியாழக்கிழமை வருகிறது. நவம்பர் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் விடுமுறை கிடைத்தால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்பாக அமையும் அந்த வகையில் நவம்பர் 1ஆம் தேதி விடுமுறை விட தமிழக அரசுக்கு அரசு ஊழியர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தது.
இதனை எற்ற தமிழக அரசு நவம்பர் 1ஆம் தேதியும் தமிழகம் முழுவதும் பொது விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியானது. இதனால் சனி மற்றும் ஞாயிற்றிக்கிழமைகளை சேர்த்து தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது.
புதுச்சேரியில் 5 நாட்கள் விடுமுறை
இந்தநிலையில் வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில், அதற்கு முந்தைய நாளும் விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது. இதற்கு தமிழக அரசு எந்தவித பதிலும் அளிக்காத நிலையில் புதுச்சேரி அரசு அக்டோபர் 30ஆம் தேதியும் பொது விடுமுறை அறிவித்துள்ளது.
அதன் படி வருகிற புதன்கிழமை அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் இயங்காது என அறிவித்துள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 16ஆம் தேதி அரசு அலுவலங்கள், பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.