டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு வெளியாகும் தேதி என்ன.? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

First Published Oct 28, 2024, 10:46 AM IST

தமிழக அரசுப் பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 15.8 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், தீபாவளிக்கு முன்னதாக முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

tnpsc

டிஎன்பிஎஸ்சி தேர்வு

தமிழக அரசு பணிகளில் இணைய இளைஞர்களின் விருப்பமாக இருக்கும், இதற்காக இரவு பகல் பாராமல் அரசு பணியாளர் தேர்விற்கு தயாராவார்கள். அந்த வகையில் குரூப் 4 தேர்விற்கு இளைஞர்கள் தயாரானார்.  8,932 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30ம் தேதி வெளியானது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தனி உதவியாளர், கிளார்க் என பல பணிகளுக்கு தேர்வு நடைபெற்றது.  ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஜூன் 9ம் தேதி தமிழகம் முழுவதும் தேர்வு நடைபெற்றது. 
 

tnpsc

15.8 லட்சம் பேர் எழுதிய தேர்வு

அதன்படி இந்த தேர்வை சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், தமிழகம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர்.  அரசு பணியாளர் தேர்வு எழுதி பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே தேர்வு முடிவுகளை 3 மாதங்களில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதன் படி 3மாத காலத்திற்குள் அதாவது குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

Latest Videos


tnpsc

இரண்டு நாட்களில் தேர்வு முடிவு

இதனை தொடர்ந்து குரூப் 4 முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வு எழுதியவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தீபாவளிக்கு முன்னதாக முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் எந்த தேதியில் டிஎன்பிஎஸ்சி  தேர்வு முடிவுகளை வெளியிடுவது என்பது குறித்து முடிவெடுப்பதற்காக தேர்வாணையத்தின் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில்  குரூப் 4 தேர்வு முடிவுகளை தீபாவளிக்கு முன்னதாக நாளை மறுதினம்( இரண்டு நாட்களுக்குள்) வெளியிடப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

click me!