எடப்பாடியார் இல்லை இனி முகமூடியார்..! பழனிசாமிக்கு புதுப்பெயர் சூட்டிய டிடிவி தினகரன்

Published : Sep 17, 2025, 01:47 PM IST

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமியை இனி முகமூடியார் என அழைக்கலாம் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

PREV
14
தன்மானம் தான் முக்கியம் என வீர வசனம் பேசிய எடப்பாடி

தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு தான் எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு ஆட்சி அதிகாரம் முக்கியம் இல்லை தன்மானம் தான் முக்கியம். அதனை யாருக்காகவும் ஒரு இம்மி அளவு கூட விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று வீரவசனம் பேசினார்.

24
பழனிசாமியின் தரம் இதுதான்..

அப்படி பேசிய பழனிசாமி தற்போது அமித்ஷாவை சந்தித்து ரகசியமாகப் பேசியுள்ளார். பழனிச்சாமி எதற்காக இப்படி நடந்துகொள்ள வேண்டும்? உங்கள் கூட்டணிக்கட்சியின் தலைவர்களில் ஒருவர் தான் அமித்ஷா அவரை சந்தித்துவிட்டு யாராவது முகத்தை மூடிக்கொண்டு வருவார்களா? இது தான் பழனிச்சாமியின் தரம். இதை வைத்தே அவரின் மதிப்பை அனைவரும் அறிந்துகொள்ள முடியும். உள்துறை அமைச்சரின் வீட்டில் இருந்து முகத்தை மூடிக்கெண்டு வந்த பழனிசாமியை இனி முகமூடியார் என்று அழைக்கலாம்.

34
முத்துராமலிங்க தேவருக்கு பாரதரத்னா

பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என்பது அப்பகுதியைச் சேர்ந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. முத்துராமலிங்க தேவரை தென்மாவட்ட மக்கள் பலரும் கடவுளாக வணங்கி வருகின்றனர். அப்படிப்பட்ட நோக்கத்தை யார் வெளிப்படுத்தினாலும் அதனை நாங்கள் வரவேற்போம். இதில் யாராக இருந்தாலும் எங்களுக்கு மாற்றுக்கருத்து கிடையாது.

44
தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்

தமிழக மக்கள் இனி எடப்பாடி பழனிசாமியிடம் ஏமாற மாறட்டார்கள். தொண்டர்களால் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது தான் அதிமுக விதி. ஆனால் அதனை தங்கள் லாபத்திற்காக மாற்றிவிட்டார்கள். தற்போது இருப்பது அதிமுக இல்ல எடப்பாடி திமுக. அவர்கள் நிச்சயம் தோற்கடிக்கப்படுவார்கள் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories