New Born Baby
திருச்சி மாவட்டம் நவகுடியை சேர்ந்தவர் திருமுருகன். இவரது மனைவி துர்காதேவி. இவர் கர்ப்பமாக இருந்த நிலையில் பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து கடந்த 27ம் தேதி மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்த பிறகு அதற்கு இருதய குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து குழந்தை உடனே மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
Ambulance
நேற்று பிற்பகல் சரியாக 1 மணிக்கு திருச்சியில் இருந்து கிளம்பிய ஆம்புலன்ஸ் காவல் துறை உதவியுடன் போக்குவரத்து நெரிசலில் சிக்காத வகையில் சாலை முழுவதும் கிரீன் காரிடார் அலர்ட் ஏற்படுத்தி காவல் துறையினர் போக்குவரத்தை சரி செய்து கொடுத்தனர். காவலர்கள் வாகனம் முன்னால் செல்ல மின்னல் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ் பறந்தது. இதனால் இரண்டரை மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் கோவையில் உள்ள ராமகிருஷ்ணா தனியார் மருத்துவமனைக்கு வந்தடைந்தது.
இதையும் படிங்க: School College Holiday: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு குட்நியூஸ்! செப்டம்பர் 17ம் தேதி பொது விடுமுறை!
Coimbatore
மருத்துவமனை வளாகத்தில் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்கு தயாராக இருந்த குழுவினர் ஆம்புலன்சில் இருந்து உடனடியாக குழந்தையை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றினார். திருச்சியில் இருந்து கோவைக்கு சுமார் 220 கிலோ மீட்டர். குறைந்த பட்சம் 4 மணி நேரமாகும். ஆனால் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் போலீசார் வழிவகை செய்து கொடுத்ததால் இரண்டரை மணி நேரத்திலேயே குழந்தையுடன் ஆம்புலன்ஸ் கோவைக்கு வந்து சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. 2:30 மணி நேரத்தில் ஆம்புலன்ஸை திருச்சி மாவட்டத்திலிருந்து கோவைக்கு இயக்கி வந்த ஓட்டுனருக்கு மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.