JOB : 60ஆயிரம் சம்பளம்; மாநகராட்சி மருத்துவமனையில் வேலை - உடனே விண்ணப்பிக்க அழைப்பு

First Published | Sep 5, 2024, 1:10 PM IST

தமிழக அரசின் சுகாதாரத்துறையில் காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஒப்பந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 6.மற்றும் செப்டம்பர் 12ஆம் தேதியாகும்

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

தமிழக அரசு சார்பாக படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பணியில் சேர்வதற்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தப்பட்டு வேலை வாய்ப்பு உருவாக்கப்படுகிறது. இதே போல தனியார் துறையிலும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழக அரசு சார்பாக வெளிநாட்டு தொழில் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்ப்பதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் சொந்த தொழில் செய்யும் இளைஞர்களுக்கும் பயிற்சி வழங்கி அரசின் மானியத்தோடு தொழில் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஒப்பந்த அடிப்படையில் வேலை

இந்தநிலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை வாய்ப்பும் தமிழக அரசின் சுகாதாரத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை மற்றும் தேசிய நலக்குழுமம் சார்பில், மாவட்ட நலச்சங்கம் மூலம் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப பணி நியமனம் செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

11 ஒப்பந்த பணியிடங்களை நிரப்பப்படவுள்ளது. இப்பணியிடங்களுக்கான விண்ணப்பபடிவம் மற்றும் விவரங்கள் தொடர்பாக இந்த இணையதள முகவரியில்  https://kancheepuram.nic.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்களுடன் வருகிற செப்டம்பர் 12ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

Tap to resize

மருத்துவர்கள் அழைப்பு

இந்தநிலையில் சென்னை மாநகராட்சி சார்பாகவும் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, சென்னை மாநகர சுகாதார திட்டத்தின் கீழ் காலியாக உள்ள மருத்துவர்கள், மருத்துவ அலுவர்கள், செவிலியர்கள் மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர் ஆகிய பணி இடங்கள் நிரப்பப்படவுள்ளது.  இந்த பணியிடங்கள் விண்ணப்பிக்க கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் நாளையோடு விண்ணப்பிக்க கடைசி நாளாகும். எனவே மருத்துவ பணிகளில் விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் உடனடியாக விண்ணப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

மாநகர சுகாதார திட்ட பணியிடங்கள் விவரம்:

மருத்து அதிகாரி  - 30 பணியிடங்கள், செவிலியர்  - 32,  சுகாதார பணியாளர் - 12, மருத்துவ உதவி அலுவலர் - 66 என ஒட்டுமொத்தமாக மொத்தம் 140 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

மாத ஊதியம்

மருத்துவ அதிகாரிக்கு மாத சம்பளமாக 60 ஆயிரம் ரூபாயும், செவிலியருக்கு 18ஆயிரம் ரூபாயும், பல்நோக்கு சுகாதார பணியாளருக்கு 14ஆயிரம் ரூபாய் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதவி அலுவலர் பணிக்கு  8,500 ரூபாய் சம்பளம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது  இந்த மூன்று பணியிடங்களுக்கும் 50 வயதுக்குட்ட நபர்கள்  விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. 

பணியாளர்கள் தேர்வு முறை: 

மருத்து பணிக்கு தகுதியான விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதனையடுத்து பணியாளர்கள் உறுதி செய்யப்படுவார்கள். இந்த பணியானது ஒப்பந்த அடிப்படையிலான பணி ஆகும் எனவும்  தபால் வழியில் விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 


கல்வி தகுதி: 

மருத்துவ அதிகாரி பணியிடத்திற்கு மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ் முடித்து இருக்க வேண்டும். செவிலியர் பணிக்கு பி.எஸ்.சி நர்சிங் மற்றும்  டிப்ளமோ நர்சிங் முடித்து இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செவிலியர் கலந்தாய்வில் பதிவு செய்திருப்பது அவசியம் என கூறப்பட்டுள்ளது.

பல்நோக்கு சுகாதார பணியாளர் பணிக்கு அறிவியல் பிரிவில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் சுகாதார ஆய்வாளர் பணி மற்றும் சுகாதார ஆய்வாளர்  படிப்புக்கான இரண்டு ஆண்டு டிப்ளமோ முடித்து இருப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் மருத்துவ  உதவி அலுவலர் பணிக்கு 8-ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

மருத்து பணிக்கு விண்ணப்பிக்கவேண்டிய முகவரி:

உறுப்பினர் செயலர்
மாநகர மருத்துவ அதிகாரி, 
பொது சுகாதாரத்துறை
3வது தளம், அம்மா மாளிகை, பெருநகர சென்னை மாநகராட்சி
சென்னை- 600003

இந்த முகவரிக்கு செப்டம்பர் 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மேலும் பணியாளர் தேர்வு தொடர்பாக கூடுதல் தகவல்களை பெற   இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்  https://chennaicorporation.gov.in/gcc/pdf/Application_UHWC.pdf

Latest Videos

click me!