Annamalai : தேமுதிகவில் இணைய விரும்பிய அண்ணாமலை.!! தடுத்த விஜயகாந்த்.?- புது தகவலை வெளியிட்ட திருச்சி சூர்யா

First Published | Jul 2, 2024, 1:07 PM IST

தேமுதிகவில் இணைய விருப்பம் தெரிவித்து விஜயகாந்தை அண்ணாமலை சந்தித்து பேசியதாகவும், அதற்கு விஜயகாந்த் இரண்டு மணி நேரம் அட்வைஸ் செய்து திருப்பி அனுப்பி வைத்ததாக திருச்சி சூர்யா கூறியுள்ளார். 
 

தமிழகத்தில் பாஜக

தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு போட்டியாக பாஜகவை வளர்க்க டெல்லி மேலிடம் பல முயற்சிகளை மேற்கொண்டது. குறிப்பாக தமிழிசை, எல்.முருகன் என பல தலைவர்களை நியமித்து திமுக- அதிமுகவிற்கு டப் கொடுத்தது. இதனையடுத்து தான் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலையை நியமித்தது. அண்ணாமலையும் தீவிரமாக கட்சி வேலைகளை செய்யத்தொடங்கினார்.

அண்ணாமலையின் அரசியல்

தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டார். ஆளுங்கட்சிக்கு சவால் விடும் வகையில் பல பேட்டிகள் அறிக்கைகளை வெளியிட்டார். கூட்டணி பலத்தோடு வெற்றி பெறலாம் என சிந்திக்கும் தலைவர்களுக்கு மத்தியில் தனித்து போட்டியிட்டு பாஜகவை தமிழகத்தில் வளக்க நினைத்தார் அண்ணாமலை, 

Tap to resize

அண்ணாமலை - திருச்சி சூர்யா

பாஜக தேசிய மேலிடமும் அண்ணாமலை மீது அதிகப்படியான நம்பிக்கையை வைத்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் பாஜக முன்னாள் தலைவரான தமிழிசையை எச்சரித்தது. இந்தநிலையில் அண்ணாமலையின் வலது கரமாக செயல்பட்டு வந்த திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனையடுத்து பாஜகவிற்கு எதிராக பலவித கருத்துகளை சமூகவலைதளத்தில் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் அண்ணாமலைக்கு அரசியல் ஆர்வம் எப்படி வந்தது. அரசியலில் இணைய அண்ணாமலை எடுத்த திட்டம் என்ன என யுடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். 

அண்ணாமலை அரசியல் ஆர்வம்

அதில், திருச்சி சூர்யா கூறும் போது, அண்ணாமலை ஐபிஎஸ் பயிற்சியின் போதே அரசியல் ஆசை ஏற்பட்டுள்ளது. அப்போது தன்னுடன் பணியாற்றியவர்களிடம் நான் சட்டத்துறை அமைச்சராக வருவேன் நீங்கள் எனக்கு சல்யூட் அடிப்பீர்கள் என தெரிவித்துள்ளதாக திருச்சி சூர்யா கூறுகிறார்.

Annamalai IPS

 தேமுதிகவில் அண்ணாமலை

அடுத்ததாக ஐபிஎஸ் பதவியில் இருக்கும் போது அண்ணாமலை தேமுதிக தலைவராக இருந்த விஜயகாந்தை அவரது  வீட்டில் சென்று சந்தித்து பேசியதாகவும். அப்போது தான் தேமுதிகவில் இணைய விரும்புவதாக விஜயகாந்திடம் அண்ணாமலை கூறியதாக தெரிவித்துள்ளார். 

Captain Vijayakanth

அட்வைஸ் செய்த விஜயகாந்த்

இதனை தொடர்ந்து விஜயகாந்த், அண்ணாமலைக்கு இரண்டு மணி நேரம் அட்வைஸ் செய்ததாகவும், நல்ல பதவியில் இருக்கீங்கள், நல்ல இடத்தை அடைந்துள்ளீர்கள், இதன் மூலம் மக்களுக்கு சேவை செய்யுங்கள். நீங்கள் ஏற்கனவே அதிகாரத்தில் உள்ளீர்கள்.  

கஷ்டம் என வருபவர்களுக்கு உதவி செய்யுங்கள், சட்டம் ஒழுங்கை சரியாக கவனியுங்கள் எனக்கூறி வீட்டு வாசல் வரை வந்த விஜயகாந்த், அண்ணாமலையை காரில் ஏற்றி அனுப்பி வைத்ததாக தெரிவித்தார். 
 

பாஜக மாநில தலைவராக அண்ணாமலை

இதனை தொடர்ந்து தான் பாஜகவின் மூத்த நிர்வாகி பி எல் சந்தோஷ் தொடர்பு கிடைக்க ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைய அண்ணாமலை முடிவெடுத்தார். அண்ணாமலையை பதவியை ராஜினாமா செய்த பின்னர்  ஒரு வருடமாக கட்சியில் சேர்க்கவில்லை,

ஒரு வருடமாக அண்ணாமலையை பாஜக பரிசோதனை செய்துள்ளார்கள். ஒரு வருடம் சும்மா தான் இருந்தார். இதனையடுத்து தான் பாஜக மாநில துணை தலைவரை தொடர்ந்து தலைவராக பதவியை அண்ணாமலை அடைந்ததாக திருச்சி சூர்யா கூறியுள்ளார். 
 

Latest Videos

click me!