குளிர்சாதன பேருந்துகளிலும் இனி எப்போதும் பயணம் செய்யலாம்.! இந்த ஒரு கார்டு இருந்தால் போதும்- சூப்பர் திட்டம்

சென்னையில் குளிர்சாதன பேருந்துகளிலும் பயணிக்கக்கூடிய புதிய பயண அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.2000 மதிப்புள்ள இந்த அட்டையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் குளிர்சாதன பேருந்துகளிலும் வரம்பின்றி பயணிக்கலாம்.

Travel card introduced for travel on air conditioned buses kak

Travel card introduced air conditioned buses : சென்னையில் ஆயிரக்கணக்கான அரசு பேருந்துகள் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைவான கட்டணத்தில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக ஏழை எளிய மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல அரசு பேருந்துகள் பெரிதும் உதவியாக உள்ளது. மேலும் பெண்களுக்காக விடியல் திட்டத்தின் கீழ் இலவசமாகவும் பெண்கள் பேருந்தில் பயணம் செய்யலாம். 

ஆயிரம் ரூபாய் பயண அட்டை

இதே போல கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் ஆயிரம் ரூபாய் பயண அட்டையானது சென்னையில் மாநகர போக்குவரத்து கழகத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அட்டையின் மூலம் எங்கிருந்து எங்கு வேண்டும் என்றாலும் பயணிக்கலாம், எத்தனை முறை வேண்டும் என்றாலும் பயணிக்கலாம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த பயண அட்டையில் குளிர் சாதன பேருந்துகளில் பயணம் செய்ய முடியாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.


குளிர்சாதன பேருந்துகளிலும் பயணம்

இந்த சூழ்நிலையில் குளிர்சாதன பேருந்துகளிலும் பயணம் செய்திடும் வகையில் புதிய பயண அட்டையானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  இன்று (19.03.2025), போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்  மந்தைவெளி பேருந்து நிலையத்தில், மா.போ.கழக பயணிகளின் வசதிக்காக குளிர்சாதன பேருந்து உட்பட அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்யும் வகையிலான ரூ.2000/- மதிப்புடைய விருப்பம்போல் பயணம் செய்யும் (TAYPT) மாதாந்திர பயண அட்டையை அறிமுகப்படுத்தினார்கள்.

2000 ரூபாய் பயண அட்டை

இந்த பயண அட்டையை பயன்படுத்தி பயணிகள் மாநகர போக்குவரத்து கழக குளிர்சாதன பேருந்து உட்பட அனைத்து பேருந்துகளிலும் எண்ணிக்கையற்ற பயண தடவைகள் பயணம் செய்யலாம். இந்த ரூ. 2,000/- மதிப்பிலான TAYPT பயண அட்டை மாநகர போக்குவரத்து கழக அனைத்து மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையங்களிலும் வழங்கப்படுகிறது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Latest Videos

click me!