வீடுகளுக்கே நேரடியாக தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! சட்டசபையில் வெளியான அசத்தல் அறிவிப்பு

ஏழை எளிய மக்களுக்காக நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. நாகர்கோவிலில் நடமாடும் நியாயவிலைக்கடைகள் அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார். மேலும், ரேஷன் பொருட்கள் விநியோகம் குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது.

Direct distribution of ration items to homes in Tamil Nadu KAK

Direct delivery of ration items to homes : ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் நாடு முழுவதும் நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது.  அரிசி,சக்கரை, கோதுமை, பருப்பு, மண்ணெண்ணெய், பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது.   தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் 2 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரத்து 119 மின்னணு குடும்ப அட்டைகள் உள்ளன. முழு நேர நியாய விலை கடைகள் 26 ஆயிரத்து 502 செயல்பட்டு வருகிறது.

Direct distribution of ration items to homes in Tamil Nadu KAK
தமிழகத்தில் ரேஷன் கடைகள்

 பகுதிநேர கடைகள் 10 ஆயிரத்து 452 என மொத்த கடைகளின் எண்ணிக்கை  36 ஆயிரத்து 954ஆக உள்ளது. இந்த கடைகள் மூலமாக மக்கள் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். இந்த நிலையில் ரேஷன் பொருட்கள் வீட்டிலேயே கொண்டு விநியோகிக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வெளியிடப்பட்டது. அந்த வகையில் தமிழக சட்டப்பேரைவையில் வீட்டிற்கே சென்று சேரும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


நடமாடும் நியாய விலைக்கடைகள்

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி, ஏழை எளிய மக்கள் அதிகாலை பணிக்கு சென்று இரவு நேரத்தில் வீடு திரும்புவதால் நியாய விலைக்கடைகளில் பொருட்களை பெற முடியவில்லை என்பதால் நாகர்கோவில் தொகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நடமாடும் நியாய விலைக்கடைகள் அமைக்க அரசு முன்வருமா ? என கேள்வி எழுப்பினார். 

எப்போது வேண்டுமானலும் ரேசன் பொருட்கள்

அதற்கு பதிலளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, நாகர்கோயிலில் ஏற்கனவே 31 நியாய விலைக்கடைகளும், 10 பகுதிநேரக் கடைகளும் இயங்கி வருவதால் நடமாடும் நியாயவிலைக்கடைகள் அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் இல்லை என பதிலளித்தார்.  தொடர்ந்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கர்நாடக மாநிலத்தில் எப்போது வேண்டுமானலும் ரேசன் பொருட்கள் பெறும் வகையில் திட்டம் இருக்கும் நிலையில், அதைப் போலவே தமிழகத்திலும் செயல்படுத்த அரசு முன்வருமா எனவும் கேள்வி எழுப்பினார். 
 

வீடுகளுக்கு தேடி வரும் ரேஷன் பொருட்கள்

செங்கோட்டையனுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் வீடுகளுக்கு நேரடியாக ரேசன் பொருட்களை விநியோகிக்கும் திட்டம் குறித்து வரும் 20 ஆம் தேதி உணவுத்துறை அதிகாரிகள் பார்வையிட இருப்பதாகவும், அவர்கள் அளிக்கும் அறிக்கையின்  அடிப்படையில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று இத்திட்டத்தை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

Latest Videos

click me!