அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தலையில் இடியை இறக்கிய தமிழக அரசு!

Published : Mar 19, 2025, 09:48 AM ISTUpdated : Mar 19, 2025, 12:42 PM IST

Tamil Nadu Government Employees: திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலை நிறுத்தம்.

PREV
15
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தலையில் இடியை இறக்கிய தமிழக அரசு!
old pension scheme

திமுக தேர்தல் வாக்குறுதியாக தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்,  காலிப்பணியிடங்களை நிரப்புதல், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்  உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசினர். ஆனால் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நிதி நிலைமையை காரணம் காட்டி தமிழக அரசு தட்டிக்கழித்து வருகிறது. 

25
Government employees

இந்நிலையில் இந்த ஆட்சிக்காலத்திற்கான கடைசி முழு பட்ஜெட்டை கடந்த மார்ச் 14ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அரசு ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால்  அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை சரண்டர் செய்து பணப்பலன் பெறுவதற்கான நடைமுறை மீண்டும் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு மட்டும் வெளியானது.

35
government employees protest

ஆனால் அந்த நடைமுறையும் அடுத்த ஆண்டு முதல் தான் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாத கண்டித்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் தமிழக அரசு எச்சரித்துள்ளது. 

45
Tamil Nadu government warns

அதாவது அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில், பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. 

55
Salary

மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது. மேலும் காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராத ஊழியர்களின் விவரங்களை சேகரிக்கவும் அவற்றை மனித வள மேலாண்மை துறைக்கு அனுப்பவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories