தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் 1961-ம் ஆண்டிலிருந்து பொது மக்களின் நலன் கருதி மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கி ஒதுக்கீடு செய்து வருகிறது. அந்த வகையில் ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரர்கள் முழுத் தொகையையும் செலுத்திய பிறகு நடைமுறையில் உள்ள வாரிய விதிமுறைகளின்படி விற்பனை பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது. விற்பனை பத்திரம் பெற்ற ஒதுக்கீடுதாரர்களுக்கு பட்டா பெற வருவாய் துறையுடன் இணைந்து சிறப்பு முகாம்கள் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.