28 ரயில்கள் ரத்து
சென்னை மக்களுக்கு முக்கிய போக்குவரத்து தேவையாக மின்சார ரயில்கள் உள்ளது. அந்த வகையில் 5 ரூபாய் டிக்கெட்டில் நீண்ட தூரத்திற்கு பயணம் செய்ய முடியும். குறிப்பாக சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரையும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் வரையும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் தான் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பல இடங்களுக்கு பணிக்கு செல்ல பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் மின்சார ரயிலில் கட்டணமாக 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரயில் தண்டவாளங்களில் பராமரிப்பு காரணமாக 28 ரயில்கள் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Chennai Train
புதிய நேர அட்டவணை
அதன் படி, சென்னை கடற்கரை முதல் தாம்பரம் இடையே 14 ரயில்களும், தாம்பரம் முதல் கடற்கரை இடையே 14 ரயில்கள் என மொத்தம் 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை புதிய நேர அட்டவணைபடி மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னை பீச்- தாம்பரம் இடையே இருமார்க்கங்களிலும் 228 ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. தற்போது 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
chennail bus
போக்குவரத்து கழகம் அறிவிப்பு
28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பயணிகள் வசதிக்காக தமிழக அரசின் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு. திருமால்பூர், காஞ்சிபுரம். அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம் செய்துள்ளதாக தென்னக ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேற்கண்ட இடங்களில் இருந்து கடற்கரைக்கு வரும் ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. புதிய நேர அட்டவணை இன்று (நவ. 22) முதல் அமலுக்கு வருகிறது எனவும். 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுள்ளது.
bus
கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்
இந்த நிலையில் மாநகர போக்குவரத்து கழகம் வழக்கம்போல் பிராட்வேயில் இருந்து தாம்பரம் வழியாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 10 பேருந்துகளை பிராட்வே முதல் தாம்பரத்திற்கும், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 10 பேருந்துகளை தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக மொத்தம் கூடுதலாக 20 பேருந்துகள் பயணிகள் நலன் கருதி இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் எண்ணிக்கை இவ்வழித்தடங்களில் அதிகரிப்பதை பொறுத்து கூடுதல் பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.