TRAIN : 3 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த தீபாவளி ரயில் டிக்கெட்.! சிறப்பு ரயில் அறிவிப்பு எப்போது வெளியாகும்.?

First Published | Jul 3, 2024, 9:32 AM IST

தீபாவளி பண்டிகையையொட்டி ரயில் முன்பதிவானது இன்று தொடங்கிய நிலையில் 3 நிமிடங்களில் அனைத்து ரயில்களுக்கான டிக்கெட்டும் விற்று தீர்ந்தது. இதனால் வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
 

சென்னையும் பண்டிகை நாட்களும்

சொந்த ஊரியில் படித்த படிப்பிற்கு வேலை கிடைகாமலும், ஏதாவது வேலை கிடைக்குமா என எதிர்பார்ப்பிலும் சென்னையை நோக்கி தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் படையெடுத்து வருகின்றனர். வந்தவர்களை வாழ வைக்கும் சென்னையில் வெளியூர்களை சேர்ந்தவர்கள் தான் லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர்.

தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் என விஷேச நாட்களுக்கு சொந்த ஊருக்கு சென்று உறவினர்களோடு பண்டிகையை கொண்டாட விரும்புவார்கள். இதற்காக பேருந்து, ரயில், சொந்த வாகனங்கள் மூலம் சென்னையை காலி செய்து விட்டு 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள்.

ரயிலில் பயணிக்க மக்கள் ஆர்வம்

அந்த வகையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான மக்கள் ரயில் பயங்களையே பெரிதும் விரும்புவார்கள். குறைந்த கட்டணம், பாதுகாப்பு, டிராபிக் இல்லாததால் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புவார்க்ள. அந்த வகையில் தீபாவளி பண்டிகைக்கு 120 நாட்களுக்கு முன்பாக ரயில் முன்பதிவு இன்று செய்யப்பட்டது. 

Tap to resize

தீபாவளி ரயில் டிக்கெட்

அக்டோபர் 31ஆம் தேதி காலையில் அதாவது தீபாவளி தினத்தில்  சொந்த ஊருக்கு செல்வதற்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியது. தொடங்கிய 3 வது நிமிடத்திலேயே அனைத்து ரயில் டிக்கெட்களும் காலியாகிவிட்டது. பெரும்பாலான ரயில்கள் காத்திருப்போர் பட்டியலே உள்ளது.

வீக் எண்ட் லீவு! சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு போறீங்களா! அப்படினா இந்த செய்தி உங்களுக்குதான்.!

ஏமாற்றம் அடைந்த ரயில் பயணிகள்

பயணிகள்யணிகளயணிகயணியணயஎனவே தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்று கொண்டாட வேண்டும் என திட்டமிட்டு ரயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய காத்திருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதே போல ஐஆர்டிசி இணையதளம் மூலமும் டிக்கெட் புக்கிங்கிற்காக காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைத்தனர். இந்தநிலையில் தற்போதே ஆயிரக்கணக்கானோர் காத்திருப்போர் வரிசையில் இருப்பதால் சிறப்பு ரயில் விட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
 

சிறப்பு ரயில் அறிவிப்பு.?

இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில் கண்டிப்பாக தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் தென் மற்றும் வட மாவட்டங்களுக்கும், வட மாநிலங்களுக்கும் சிறப்பு ரயில் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 120 நாட்கள் இருப்பதால் தீபாவளி நெருக்கத்தில் சிறப்பு ரயில் அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிடும் என தெரிவித்தனர். 

Latest Videos

click me!