- Home
- Gallery
- வீக் எண்ட் லீவு! சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு போறீங்களா! அப்படினா இந்த செய்தி உங்களுக்குதான்.!
வீக் எண்ட் லீவு! சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு போறீங்களா! அப்படினா இந்த செய்தி உங்களுக்குதான்.!
அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Transport Department
இது தொடர்பாக போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- 05ம் தேதி வெள்ளிக்கிழமை (அமாவாசை) 06ம் தேதி (சனிக்கிழமை) 07ம் தேதி (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Weekend Special Buses
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 05ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 415 பேருந்துகளும், 06ம் தேதி (சனிக்கிழமை) 310 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 05ம் தேதி வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும் 06ம் தேதி சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Government Buses
மேலும். வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 05ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 15 பேருந்துகளும் 06ம் தேதி (சனிக்கிழமை) அன்று 15 பேருந்துகளும் ஆக 30 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் , ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு.!
Kilambakkam CMBT
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 7,350 பயணிகளும் சனிக்கிழமை 3,264 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 7,290 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.