கேரளா மாநிலம் பாலக்காடு அருகே ஷோரணூரில் உள்ள பாரதப்புழா ஆற்றின் ரயில்வே மேம்பாலம் ஒன்று உள்ளது. இந்த ரயில்வே மேல்பாலத்தில் தொழிலாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் 4 ஒப்பந்த தொழிலாளர்கள் மீது மோதியது. இதில், 4 பேரும் உடல் சிதறி ஆற்றில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் மற்றொரு உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உயிரிழந்த 4 பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. சேலம் மாவட்டத்தை சேந்த வள்ளி, ராணி, லட்சுமணன் என்பது தெரியவந்துள்ளது. மற்றொருவர் யார் என்பது பற்றி எந்த விவரமும் வெளியாகவில்லை. கைப்பற்றப்பட்ட உடல்கள் பாலக்காடு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஷொர்ணூர் ரயில் நிலையத்தைக் கடந்து கொச்சின் பாலத்தில் மாலை 3.05 மணியளவில் இந்த கொடூர விபத்து நிகழ்ந்தது. ரயில் வருவதைப் பார்த்து ஓட முயன்றபோது, அவர்கள் மீது ரயில் மோதியது தெரியவந்துள்ளது.