Monkeypox: ஷாக்கிங் நியூஸ்! தமிழகத்தில் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி? பரவியது எப்படி? பரபரப்பு தகவல்!

First Published | Nov 2, 2024, 5:32 PM IST

Monkeypox: ஷார்ஜாவில் இருந்து தீபாவளி கொண்டாட வந்த இளைஞருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருப்பதை அடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று பரவி கோரத்தாண்டவம் ஆடியது. இதில், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த பாதிப்பில் இருந்து மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் மீண்டும் குரங்கு அம்மை நோய் பரவி வருவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட குரங்கு அம்மை, தற்போது 116 நாடுகளில் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை! எத்தனை கோடிக்கு மது விற்பனை? எந்த மாவட்டம் முதலிடம்!

இந்நிலையில் தமிழகத்தில் குரங்கு அம்மை அறிகுறிகளுடன் இளைஞர் ஒருவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை சேர்ந்த 32 வயது இளைஞர் ஒருவர் ஷார்ஜாவில் பணிபுரிந்து வந்துள்ளார். தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாட ஷார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார்.  வழக்கம் போல பயணிகள் அனைவரையும் சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

Latest Videos


அப்போது அந்த இளைஞரை பரிசோதனை செய்த போது லேசான உடல் வெப்பநிலை குரங்கமை அறிகுறி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த இளைஞர் அரசு மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்க முயன்றனர். ஆனால் யாரும் தன்னுடன் இல்லாத காரணத்தால் அங்கிருந்து எஸ்கேப்பாகி திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். 

இதையும் படிங்க: Government Employee: அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி! போனஸ், டிஏ.வில் ஏதாவது டவுட்டா! உடனே இதை செக் பண்ணுங்க

இது குறித்து தகவல் அறிந்த மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதியில்லை என்று எடுத்து கூறி அந்த இளைஞரை மீண்டும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். தற்போது தனி வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் ரத்த மாதிரிகள் எடுத்து புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் வந்த பிறகே அவருக்கு அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருக்கிறதா என்பது தெரியவரும்.

click me!