சுற்றுலாவை தவிர நீலகிரி மாவட்டத்தின் முக்கிய தொழிலாக இருப்பது அது விவசாயம் தான். நீலகிரியில் விளைவிக்கப்படும் கேரட், உருளைக்கிழங்கு, முட்டை கோஸ், முள்ளங்கி, பீட்ரூட் போன்ற காய்கறிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மலைக் காய்கறி சாகுபடியில் கேரட் முக்கிய பங்கு வகிக்கிறது.
சென்னை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட அனைத்து மண்டிகளுக்கு ஊட்டியில் விளைவிக்கப்படும் கேரட் அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு கிலோ 25 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த கேரட் விலை திடீரென உயர்ந்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு கேரட் விலை நேற்று முதல் ஒரு கிலோ ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.