"டிசம்பரில் சூறாவளி பயணம்" த.வெ.க கட்சி தலைவர் விஜயின் அடுத்த அரசியல் மூவ் இது தானா?

First Published | Nov 2, 2024, 4:53 PM IST

Thalapathy Vijay : உண்மையில் தளபதி விஜயின் அரசியல் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்பது அனுதினமும் வெளியாகும் செய்திகள் வெளிப்படுத்தி வருகின்றது.

TVK Vijay

தளபதி விஜய் இன்று தமிழ் சினிமாவை பொறுத்த வரை 200 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் ஒரு டாப் நடிகர். இன்னும் பத்து ஆண்டுகளுக்கு எந்தவித தடையும் இன்றி, அவருடைய சினிமா பயணம் உச்சத்திலேயே தொடர நூறு சதவீத வாய்ப்புகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இப்படிப்பட்ட சூழலில் தன்னுடைய திரை வாழ்க்கைக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டு. 

இதுவரை தன்னை ரசித்த தமிழக மக்களுக்காக, அரசியல் ரீதியாக தன்னால் இயன்றவற்றை செய்ய தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் மூலமாக அரசியல்களம் காண உள்ளதாக தளபதி விஜய் அண்மையில் அறிவித்தார். கட்சியின் பெயர், கட்சியின் கொடி, கொடியின் பாடல் என்று வரிசையாக தளபதி விஜய் தன்னுடைய அரசியல் கட்சியை பற்றிய பல முன்னெடுப்புகளை எடுத்து வைத்த நிலையில், கடந்த அக்டோபர் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விக்கிரவாண்டியில் வெகு விமர்சியாக அக்கட்சியின் முதல் மாநில அரசியல் மாநாடு நடைபெற்ற முடிந்தது.

விஜய்யின் தூண்டிலில் சிக்கிய திருமா? ஒரே மேடையில் விஜய், திருமா - கலக்கத்தில் பிரதான கட்சிகள்

Thalapathy Vijay

இந்த மாநாட்டில் பேசிய தளபதி விஜய், நேரடியாகவே திராவிட முன்னேற்றக் கழகத்தை தாக்கி பேசினார். மத்தியில் இருப்பவர்கள் செய்வது "பாசிச" ஆட்சி என்றால் நீங்கள் செய்வது என்ன "பாயாசமா" என்று கிண்டலாக அவர் பேசிய விஷயங்கள் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக ஆட்சிப் பொறுப்பில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு என்கின்ற ஒரு புதிய யுத்தியை தமிழக அரசியலில் அவர் புகுத்திய நிலையில், அது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தொடங்கி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வரை தற்பொழுது தளபதி விஜய்க்கு எதிராக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் தளபதி விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த பொழுது, இந்த இரண்டு பேரும் அவருக்கு மிகப்பெரிய வரவேற்புகளை கொடுத்திருந்தும் குறிப்பிடத்தக்கது. 

Tap to resize

Vijay

இப்படி தன்னுடைய அரசியல் கட்சியின் மூலம் தொடக்கத்திலேயே மிகப்பெரிய அதிர்வலைகளை தமிழகத்தில் தளபதி விஜய் ஏற்படுத்தியுள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக தன்னுடைய கட்சியின் சார்பாக அவர் களமிறங்க உள்ள நிலையில், மிகப்பெரிய போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதே சமயம் பிரபல அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி அண்மையில் வெளியிட்ட ஒரு கணக்கின்படி, தமிழக அளவில் தமிழக வெற்றிக்கழகம் கட்சி ஐந்தாம் இடத்தை கூட பிடிக்காது என்றும், அவர்களுக்கு 4.2 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்றும் பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தன்னுடைய இறுதி திரைப்பட பணிகளில் ஈடுபட்டிருக்கும் தளபதி விஜய், டிசம்பர் மாசம் தன்னுடைய அடுத்த அரசியல் முன்னெடுப்பை நடத்த உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

Vijay Meeting

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தளபதி விஜயை சாடி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தொண்டர்கள் சிலர் அளித்த தகவலின் படி, வருகின்ற டிசம்பர் மாதத்தில் மண்டல வாரியாக தமிழகம் முழுவதும் தளபதி விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தங்களுடைய கட்சியினரை சந்தித்து பேசி எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்காக அனைவரையும் ஊக்கப்படுத்த உள்ளதாகவும், தொடர்ச்சியாக கட்சி பணிகளில் அவர் ஈடுபட உள்ளதாகவும் தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதே போல நாளை (அக்டோபர் 3ம் தேதி) நடக்கவிருக்கும் கட்சி உறுப்பினர்களுடன் சந்திப்பில், கட்சியின் உட்கட்டமைப்பு விவகாரம் குறித்து நடிகர் விஜய் கலந்தாலோசிக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆட்சியை பிடிக்க பிரஷாந்த் கிஷோருக்கு ரூ.100 கோடியை அள்ளி கொடுத்ததா திமுக?

Latest Videos

click me!