65 கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பே டிராபிக் ஜாம்..! நாட்டில் இருக்கிற வண்டி எல்லாம் மதுரை பக்கம்.. மிரட்டும் விஜய்

Published : Aug 21, 2025, 08:19 AM IST

நடிகர் விஜய்யின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று நடைபெறுகிறது. 2026 தேர்தலுக்கான கூட்டணி முடிவுகள் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளன. மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

PREV
15
அரசியல் களத்தில் விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலமே உள்ளதால் அனைவரின் பார்வையும் தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதி பக்கமும் திரும்பியுள்ளது. அந்த வகையில் அதிமுக- திமுகவிற்கு மாற்றாக களம் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், 

2024 பிப்ரவரியில், விஜய் தனது அதிகாரப்பூர்வ அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தொடங்குவதாக அறிவித்தார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்காமல், 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு செயல்படுவதாக அறிவித்தார். தவெகவின் முதல் மாநில மாநாடு 2024 அக்டோபர் 27-ல் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

25
மதுரை மாநாட்டில் குவியும் விஜய் ரசிகர்கள்

தற்போது நடித்து முடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் தான் கடைசி படம் என அறிவித்துள்ள விஜய் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என தெரிவித்துள்ளார். சர்கார் படத்தில் இலவசங்களை எரிப்பது போன்ற காட்சிகள் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தின. இதனால், அவர் அரசியலில் நுழையும் எண்ணம் கொண்டிருப்பதாக விவாதங்கள் எழுந்தன. 

இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு 2025 (ஆகஸ்ட் 21) இன்று மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரபத்தி என்ற இடத்தில் 506 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. 750-க்கும் மேற்பட்ட குழாய்கள் மூலம் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. RO நீர் வசதியும் உள்ளது.

35
நள்ளிரவில் நிரம்பிய மாநாட்டு திடல்

இந்த மாநாட்டில் 2026 தேர்தலுக்கான கூட்டணி முடிவுகள் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளன. மேலும், "மக்கள் என் பக்கம்" என்ற பெயரில் விஜய்யின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மதுரையில் இருந்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் இதுவரை எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைப்பது குறித்து தெளிவான முடிவு எடுக்கவில்லை. 2026 தேர்தலில் தனித்து போட்டியிடுவாரா அல்லது கூட்டணி அமைப்பாரா என்ற கேள்வி தொடர்ந்து விவாதத்தில் உள்ளது.

 மாநாட்டில் பல லட்சம் மக்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு முதலே மாநாட்டு அரங்கத்தில் மக்கள் குவிய தொடங்கியுள்ளனர். குறிப்பாக மாநாட்டு மேடைக்கு முன்புறமும், விஜய் தொண்டர்களை பார்ப்பதற்காக நடந்து வரும் வகையில் மாநாட்டு மேயில் அமைக்கப்பட்ட சிறப்பு பாதையை சுற்றியும் பல ஆயிரம் பேர் இடம்பிடித்துள்ளனர்.

45
மதுரையை நோக்கி வரும் வாகனங்கள்

இது மட்டுமில்லாமல் தவெக மாநாடு இன்று மாலை 4 மணிக்கு தான் நடைபெறவுள்ள நிலையில், தற்போதே மாநாட்டின் பெரும்பாலான இடங்கள் நிரம்பி வருகிறது. இன்னும் பல ஆயிரம் வாகனங்கள் மதுரையில் விஜய் மாநாட்டிற்காக சென்று கொண்டுள்ளது. 

இதன் காரணமாக மதுரைக்கு முன்பாக சுமார் 40 முதல் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பே டிராபிக் ஜாம் ஆகியுள்ளது. மேலும் மாநாட்டு மேடை அருகே எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் மாநாட்டிற்கு வரும் விஜய் ரசிகர்கள் 4 முதல் 5 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து வர வேண்டியுள்ளது.

55
பல கிலோ மீட்டருக்கு போக்குவரத்து நெரிசல்

இருந்த போதும் விஜய் ரசிகர்கள் அதனை பொருட்படுத்தாமல் ஜாலியாக நடந்து செல்கிறார்கள். தமிழக வரலாற்றில் தற்போது எந்த அரசியல் கட்சிக்கும் இது போன்று முதன் நாள் இரவே தொண்டர்கள் மாநாட்டில் இடம்பிடிக்க போட்டி போட்ட காட்சிகள் பார்த்தது இல்லை. நடிகர் விஜய்யின் மாநாட்டிற்காக தொண்டர்கள் குவிய தொடங்கியிருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எனவே இந்த கூட்டம் தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories