முன்னாள் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவின் பேரன் திருமணம் இன்று மாலை நடைபெறவுள்ளது. குடியரசு தலைவர், பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட விஐபிக்கள் பங்கேற்கின்றனர். இதனால் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் குடியரசு தலைவரும், பாஜக மூத்த தலைவருமான வெங்கையா நாயுடுவின் பேரன் திருமண நிகழ்வு இன்று மாலை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்குமாறு குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய விஐபிக்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சென்னைக்கு அருகில் உள்ள மகாபலிபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்வு இன்று மாலை நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொள்ள முக்கிய விஐபிக்கள் சென்னைக்கு வரவுள்ளனர்.
24
வெங்கையாநாயுடு இல்ல திருமண விழா
கேளாதோர் தேசிய நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு கருத்தரங்கில் பங்கேற்கவுள்ளார். இதனையடுத்து வெங்கையா நாயுடுவின் பேரன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். இதே போல உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சென்னைக்கு இன்று மாலை வருகிறார். மாலை 6 மணியளவில் சென்னை வரும் அமித்ஷா, விமான நிலையத்தில் இருந்து நேரடியாக மகாபலிபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கலந்து கொண்ட பிறகு இன்று இரவே சென்னை செல்லவுள்ளார்.
34
சென்னைக்கு வரும் விஐபிக்கள்
வெங்கையாநாயுடு இல்ல திருமண விழாவில் பங்கேற்க பல்வேறு மூத்த தலைவர்கள் சென்னை வரவுள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று இசிஆர் சாலையில் பயணிக்க போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர். இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,
இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் 31.01.2025 அன்று சென்னை வருவதைக் கருத்தில் கொண்டு, வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் போக்குவரத்து இயக்கத்தினை சுமூகமாகவும், தாமதத்தை குறைப்பதை உறுதி செய்வதற்காகவும் மதியம் 14.00 மணி முதல் இரவு 22.00 மணிவரை பின்வரும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
44
இசிஆர் சாலையில் போக்குவரத்திற்கு தடை
சென்னை விமான நிலையத்திலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு (ECR) செல்லும் வாகன ஓட்டிகள், பழைய மகாபலிபுரம் சாலையை (OMR) மாற்றுப் பாதையாகப் பயன்படுத்தி தங்கள் இலக்கை அடையலாம்.
> குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து வணிக வாகனங்களும் விமான நிலையம் முதல் ECR வரை உள்ள சாலையைப் பயன்படுத்த தடை விதிக்கப்படும்
பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.