தக்காளியோடு போட்டி போட்டு குறையும் வெங்காயம் விலை.! ஒரு கிலோ இவ்வளவு தானா.? அள்ளிச்செல்லும் இல்லத்தரசிகள்

Published : Jan 31, 2025, 07:19 AM IST

கடந்த சில வாரங்களாக உச்சத்தில் இருந்த காய்கறிகளின் விலை தற்போது சரிந்துள்ளது. 70 முதல் 90 ரூபாய்க்கு விற்பனையான காய்கறிகள் தற்போது 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயம் மற்றும் தக்காளி விலையும் குறைந்துள்ளது.

PREV
15
தக்காளியோடு போட்டி போட்டு குறையும் வெங்காயம் விலை.! ஒரு கிலோ இவ்வளவு தானா.? அள்ளிச்செல்லும் இல்லத்தரசிகள்
தக்காளியோடு போட்டி போட்டு குறையும் வெங்காயம் விலை

காய்கறிகள் தான் சமையலுக்கு முக்கிய தேவையாக உள்ளது. அந்த வகையில் காய்கறிகளின் விலை கூடினால் இல்லத்தரசிகளின் நிலைமை அதோ கதிதான். அந்த வகையில் தான் கடந்த சில வாரங்களாக உச்சத்தில் இருந்த காய்கறிகள் விலையானது தற்போது சரிந்துள்ளது.

அதன் படி, ஒரு கிலோ 70 முதல் 90 ரூபாய்க்கு விற்பனையான காய்கறிகள் தற்போது ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தை மாதம், தை அமாவாசை, பொங்கல் பண்டிகை உள்ளிட்ட காரணங்களுக்காக காய்கறிகளின் விலை அதிகரித்தது.

25
வெங்காயம் வரத்து அதிகரிப்பு

மேலும் வரத்து குறைவின் காரணமாகவும் உச்சத்தை தொட்டது காய்கறின் விலை .தற்போது காய்கறிகள் மூட்டை, மூட்டையாக வருவதன் காரணமாக விலையானது குறைந்து வருகிறது. அதே போல தக்காளி மற்றும் வெங்காயமும் போட்டி போட்டு விலை குறைகிறது. ஒரு கிலோ பெரிய வெங்காயம் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 3 முதல் 4 கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நாசிக்கில் இருந்து அதிகளவு வெங்காயம் வருவதால் விலை குறைந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

35
தக்காளி விலை என்ன.?

மேலும் சமையலுக்கு முக்கிய தேவையான தக்காளி விலையும் கடந்த ஒரு மாதமாக சரிவை சந்தித்தது வருகிறது. அதன் படி ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி தற்போது சற்று அதிகரித்து ஒரு கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பல இடங்களில் 4 முதல் 5 கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 

45
காய்கறிகள் விலை நிலவரம்

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 15 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

55
குறைந்தது காய்கறிகளின் விலை

முருங்கைக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும்,  முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 35 ரூபாய் விற்பனையாகிறது.

மேலும் தக்காளி ஒரு கிலோ 18  முதல் 25 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 15 முதல் 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 முதல் 80 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

Read more Photos on
click me!

Recommended Stories