சிரிச்சது ஒரு கூத்தமா? கல்லூரி மாணவிக்கு கட்டி பிடித்து முத்தம் கொடுத்த இளைஞர்! நடந்தது என்ன?

Published : Jan 30, 2025, 03:26 PM ISTUpdated : Jan 30, 2025, 03:28 PM IST

கோவையில் இளைஞரிடம் சிரித்தபடி சாரி கூறிய மாணவியை, தவறாக எண்ணி பின்தொடர்ந்து சென்று முத்தமிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

PREV
14
சிரிச்சது ஒரு கூத்தமா? கல்லூரி மாணவிக்கு கட்டி பிடித்து முத்தம் கொடுத்த இளைஞர்! நடந்தது என்ன?
சிரிச்சது ஒரு கூத்தமா? கல்லூரி மாணவிக்கு கட்டி பிடித்து முத்தம் கொடுத்த இளைஞர்! நடந்தது என்ன?

கோவையைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாலக்காடு மெயின் ரோடு குனியமுத்தூர் அருகே சென்ற போது அங்கு சாலை குண்டும், குழியுமாக இருந்தது. அப்போது அந்த குழியில் கல்லூரி மாணவியின் ஸ்கூட்டர் ஏரி இறங்கிய போது நிலை தடுமாறு அந்த வழியாக வந்த இளைஞரின் இருசக்கர வாகனம் மீது  மோதியது. 

24
College Girl

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கல்லூரி மாணவி அந்த இளைஞரிடம் சிரித்தபடி சாரி என்று கூறிவிட்டு சென்றுள்ளார். உடனே அந்த  அனைத்தையும் மறந்து விட்டு 
தன்னிடம் சிரித்துதான் பேசுகிறார் என்று நினைத்து அவரை விடாமல் பின்தொடர்ந்து சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றதும் மாணவியின் ஸ்கூட்டரின் முன் சென்று தடுத்து நிறுத்தியிருக்கிறார். பின்னர் அவரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார். 

இதையும் படிங்க: இந்த 3 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கப்போகுதாம்! வானிலை மையம் டேஞ்சர் அலர்ட்!

34
Kissing

அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அந்த மாணவியின் கையைப் பிடித்து கை மற்றும் கழுத்தில் முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கல்லூரி மாணவி அலறி கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அங்கு இருந்து இளைஞர் மின்னல் வேகத்தில் தப்பித்தார். இதுகுறித்து அந்த கல்லூரி மாணவி குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இதையும் படிங்க: பெண் குளிப்பதை வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்த பாஜக நிர்வாகி! அலறியதால் எஸ்கேப்!

44
Youth Arrested

அதில் மாணவிக்கு முத்தம் கொடுத்த கோவை புதூர் சக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த முகமது ஷெரிப் என்பதும், அவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருப்பதும் தெரிய வந்தது. மேலும் சம்பவத்தன்று மாணவி சிரித்தபடி பேசியதால் அதை தவறாக எடுத்துக் கொண்ட அவர் பின் தொடர்ந்து சென்று பேசி முத்தமிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முஹம்மத் செரீப்பை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

Read more Photos on
click me!

Recommended Stories