தமிழகத்தில் மது விற்பனை நாளொன்றுக்கு ரூ.100-125 கோடி வரை நடக்கிறது. பண்டிகை நாட்களில் விற்பனை இரட்டிப்பாகிறது. டாஸ்மாக் கடைகளுக்கு ஆண்டுக்கு 9 நாட்கள் மட்டுமே விடுமுறை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மது வாங்க செல்வோர் மறைந்து மறைந்து யாருக்கும் தெரியாமல் செல்வது வழக்கம். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் மது வாங்க செல்வதும், அருந்துவதும் பேஷனாகிவிட்டது. ஆண்களுக்கு போட்டியாக பெண்களும் களத்தில் இறங்கியுள்ளனர்.
25
இந்நிலையில் தமிழகத்தில் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதை அரசே எடுத்து நடத்தி வருகிறது. நாளொன்றுக்கு 100 முதல் 125 கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது. வார இறுதி நாட்களில் ரூ.200 கோடி அளவுக்கும் விற்பனையாகும். பொங்கல், தீபாவளி, புத்தாண்டு தினத்தில் இந்த வருமானம் இரட்டிப்பாகும். குறிப்பாக வருமானத்தை அள்ளிக்கொடுக்கும் துறையாக டாஸ்மாக் மற்றும் பத்திரப்பதிவு துறை விளங்குகிறது. குறிப்பாக இந்த இரண்டு துறையில் வரும் வருமானத்தை வைத்து தான் அரசு இயந்திரமே இயங்குவதாக கூறப்படுகிறது.
35
கடந்த பொங்கல் பண்டிகைக்கு மட்டும் ரூ.725 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகின. இது கடந்த ஆண்டு விற்பனையை விட ரூ.47 கோடி அதிகம் என கூறப்படுகிறது.
மேலும் மழை வெள்ளம் புயல் மட்டுமில்லாலம் பண்டிகை காலங்களில் மற்ற அரசு நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டாலும் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு மட்டும் விடுமுறை என்பதே இல்லை. எனவே தமிழக அரசு சார்பாக ஆண்டுக்கு 9 நாட்கள் மட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
55
அதாவது காந்தி ஜெயந்தி, குடியரசு தின விழா, மிலாது நபி, திருவள்ளூவர் தினம், வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட 9 நாட்களுக்கு மட்டுமே விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.