இன்றைய TOP 10 செய்திகள்: கூமாப்பட்டி பூங்கா முதல் குரங்கு அட்டகாசம் வரை

Published : Aug 28, 2025, 11:01 PM IST

பீகாரில் பயங்கரவாதிகள் ஊடுருவல், திருப்பூர் ஜவுளித் தொழில் பாதிப்பு, கூமாபட்டியில் புதிய பூங்கா, நீல முட்டையிட்ட கோழி, உலகப் போர் நினைவு அணிவகுப்பு, சிந்துவின் பேட்மிண்டன் வெற்றி, மிக கனமழை எச்சரிக்கை என பல நிகழ்வுகள் இன்றைய TOP 10 செய்திகளில்…

PREV
110
பீகாரில் 3 பயங்கரவாதிகள் ஊடுருவல்

பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் நேபாளம் வழியாக பீகார் மாநிலத்திற்குள் நுழைந்துள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஜெய்ஷ்-இ-முகமதுவைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பீகார் தேர்தலை சீர்குலைக்க சதி செய்யலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

210
திருப்பூர் ஜவுளித் தொழில் பாதிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி விதித்துள்ளதால், திருப்பூர் ஜவுளித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

310
கூமாபட்டியில் ரூ.10 கோடியில் பூங்கா

கூமாப்பட்டி பிளவக்கல் அணையில் பூங்கா மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “விருதுநகர் மாவட்டம் பிளவக்கல் பெரியார் அணை பூங்காவை நவீனமயமாக்குதல், அதன் உள்கட்டமைப்புகளைப் புதுப்பித்தல் மற்றும் அணுகு சாலையை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான திட்ட மதிப்பீட்டை நீர்வளத் துறையின் திட்ட உருவாக்கத் தலைமைப் பொறியாளர் அனுப்பியுள்ளார். இந்த திட்டத்திற்கு ரூ.10.00 கோடி மதிப்பீட்டுச் செலவு ஒதுக்கப்பட்டுள்ளது.

410
நீல முட்டையிட்ட கோழி

கர்நாடக மாநிலத்தில் ஒரு கோழி நீல நிற முட்டையிட்ட சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வழக்கமாக வெள்ளை முட்டையிடும் இந்தக் கோழி, திடீரென நீல நிற முட்டையிட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

510
26 நாடுகளின் தலைவர்கள் ஒரே இடத்தில்...

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்ததன் நினைவாக சீனாவில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற உள்ளது. ரஷ்யா, வட கொரியா உட்பட 26 நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர். இந்த அணிவகுப்பு சீனாவின் ராணுவ பலத்தையும் பன்னாட்டு உறவையும் எடுத்துக்காட்டும்.

610
உலக பேட்மிண்டனில் சிந்து அசத்தல்

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீன வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்த வெற்றியின் மூலம், 6 பதக்கங்களை வென்ற சாதனையை சமன் செய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

710
மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்!

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழையும், கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 03 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

810
ஒவ்வொரு துறையிலும் முதல் இடம்

தொழில்துறை வேலை வாய்ப்பில் தமிழகம் முதல் இடத்தைப் பிடித்துள்ளதை சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

“#DravidianModel ஆட்சியின் சாதனைச் சரித்திரம் தொடரும்! அரசியல் காழ்ப்புணர்வில் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அள்ளிவீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை என மக்கள் புறந்தள்ளுவார்கள்” என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

910
RCB Cares! ஆர்சிபி ரசிகர்களுக்கு உருக்கமான கடிதம்!

பெங்களூருவில் நடந்த நெரிசல் விபத்து குறித்து ஆர்சிபி அணி நிர்வாகம் முதல் முறையாகப் பேசியுள்ளது. சுமார் 80 நாட்களுக்குப் பிறகு சமூக ஊடகங்களில் பதிவிட்டு, ரசிகர்களின் நலனுக்காக ‘ஆர்சிபி கேரஸ்’ என்ற புதிய முயற்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

1010
குரங்கு செய்த அட்டகாசத்தால் ஆடிப் போன மக்கள்!

உத்தரப்பிரதேசத்தில் ஒரு குரங்கு பணப்பையைத் திருடி, பணத்தை வானில் வீசியதால் மக்கள் மீது ரூபாய் நோட்டுகள் மழை போல் கொட்டியது. இந்தச் சம்பவத்தால் ஒருவர் ரூ. 28,000 பணத்தை இழந்தார், மீதமுள்ள ரூ. 52,000 பணம் மீட்கப்பட்டது.

Read more Photos on
click me!

Recommended Stories