தொடர் விடுமுறை! பயணிகளுக்கு குஷியான அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!

Published : Aug 28, 2025, 08:08 PM IST

தொடர் விடுமுறை, பண்டிகை காலத்தையொட்டி தமிழகத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே நீட்டித்துள்ளது.

PREV
14
Southern Railway Special Trains for Diwali holidays

இந்தியாவில் தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்ய முடியும் என்பதால் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். தொடர்ந்து பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஏற்கெனவே சிறப்பு ரயில்களாக இயங்கி வரும் மதுரை கச்சிகுடா, கன்னியாகுமரி ஹைதராபாத் உள்ளிட்ட சிறப்பு ரயில்களின் சேவையை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

24
கச்சிகுடா - மதுரை

கீழ்க்கண்ட ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது:-

* ரயில் எண் 07191: கச்சிகுடா - மதுரை சிறப்பு ரயில் (திங்கட்கிழமைதோறும்) (அக்டோபர் 20, 2025 முதல் நவம்பர் 24, 2025 வரை நீட்டிப்பு)

* வண்டி எண் 07192: மதுரை ‍- கச்சிகுடா சிறப்பு ரயில் (புதன்கிழமை) (செப்டம்பர் 22, 2025 முதல் நவம்பர் 26, 2025 வரை நீட்டிப்பு)

* வண்டி எண் 07193: ஹைதராபாத் - கொல்லம் சிறப்பு ரயில் (சனிக்கிழமை) (அக்டோபர் 18, 2025 முதல் நவம்பர் 29, 2025 வரை)

* வண்டி எண் 07194: கொல்லம் - ஹைதராபாத் சிறப்பு ரயில் (திங்கள் கிழமை) (அக்டோபர் 20, 2025 முதல் டிசம்பர் 01, 2025 வரை)

34
கன்னியாகுமரி-ஹைதராபாத்

*வண்டி எண் 07230: ஹைதராபாத் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் (புதன்கிழமை) (அக்டோபர் 15, 2025 முதல் நவம்பர் 26, 2025 வரை)

*வண்டி எண் 07229: கன்னியாகுமரி - ஹைதராபாத் சிறப்பு ரயில் (வெள்ளிக்கிழமை) (அக்டோபர் 17, 2025 முதல் நவம்பர் 28, 2025 வரை)

*வண்டி எண் 07219: நரசாபூர் - திருவண்ணாமலை சிறப்பு ரயில் (புதன்கிழமை) (அக்டோபர் 01, 08, 15, 22, 29, நவம்பர் 05, 19, 26)

*வண்டி எண் 07220: திருவண்ணாமலை - நரசாபூர் சிறப்பு ரயில் (வியாழக்கிழமை) (அக்டோபர் 02, 09, 16, 23, 30, நவம்பர் 06, 13, 20, 27)

44
பயணிகளுக்கு சூப்பர் வாய்ப்பு

தீபாவளி, சத் மற்றும் பிற பண்டிகைகளின்போது ஏற்படும் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் இந்த சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களுக்கான முன்பதிவுகளும் தொடங்கி உள்ளன. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, கூட்ட நெரிசலில் சிக்காமல் பாதுகாப்பாக பயணம் செய்யலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories