இன்றைய டாப் 10 செய்திகள்: தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் முதல் ராகுல் காந்தியின் வைரல் வீடியோ வரை!

Published : Aug 13, 2025, 11:03 PM IST

சென்னையில் தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம், தேர்தல் ஆணையத்தை விமர்சிக்கும் ராகுல் காந்தியின் பதிவு, திமுகவில் இணைந்த அதிமுக மூத்த தலைவர் மைத்ரேயன் உள்ளிட்ட இன்றைய தினத்தின் டாப் 10 முக்கியச் செய்திகளின் தொகுப்பு இது.

PREV
110
சென்னையில் தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்

சென்னை மாநகராட்சியின் தனியார்மயமாக்கல் முடிவால் தூய்மைப் பணியாளர்கள் 13 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்றம் போராட்டக்காரர்களை அகற்ற உத்தரவிட்ட நிலையில், அரசு போலீசாரை பயன்படுத்தப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளது.

210
ஸ்டாலினை புரட்டியெடுத்த இபிஎஸ்!

தமிழகத்தில் மாணவர் சேர்க்கை இல்லாததால் 207 அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு கல்வி ஆண்டுகளில், கல்வித் துறையில் பல சாதனைகளை நிகழ்த்திவிட்டோம். இனி நிகழ்த்துவதற்கு மந்தஒரு சாதனையும் இல்லை என்று தினமும் மார்தட்டிப் பேட்டி அளிக்கும் விடியா திமுகவின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், இன்று தமிழகத்தில் ஒரு மாணவர்கூட சேராததால் சுமார் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக வந்த செய்திக்கு என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

310
விருந்தில் பங்கேற்குமா த.வெ.க

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தமிழக ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்துக்கு நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விஜய் கலந்து கொள்வாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

410
திமுகவில் இணைந்த மைத்ரேயன்!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில் கட்சி நிர்வாகிகள் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு தாவும் நிகழ்வு தொடங்கியுள்ளது. அந்த வகையில் எம்ஜிஆரின் விசுவாசியான முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த நிலையில், தற்போது அதிமுக மாஜி எம்.பி. மைத்ரேயன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த நிலையில் தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

510
காதலனை தேடி கள்ளப்படகில் வந்த இளம்பெண்!

இலங்கையில் இருந்து காதலனை தேடி கடல் கடந்து கள்ளப்படகில் ஒரு இளம்பெண் ராமேஸ்வரம் வந்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. அதாவது நேற்று அதிகாலையில் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையில் இலங்கையில் ஒரு இளம்பெண் அகதியாக வந்திருந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் கடலோர காவல் படையினர் விரைந்து சென்று அந்த பெண்னிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

610
டாஸ்மாக் கடை, பார்களுக்கு விடுமுறை

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் டாஸ்மாக் கடைகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. திருவள்ளுவர் தினம் - ஜனவரி 15, குடியரசு தினம் - ஜனவரி 26, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மகாவீர் ஜெயந்தி, மே தினம் - மே 1, சுதந்திர தினம் - ஆகஸ்ட் 15, நபிகள் நாயகம் பிறந்த நாள் (மிலாது நபி), காந்தி ஜெயந்தி - அக்டோபர் 2, ஆகிய தினங்களில் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளது.

710
தேர்தல் ஆணையத்தை கலாய்க்கும் ராகுல் காந்தி!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியலில் 'இறந்தவர்கள்' என்று குறிக்கப்பட்ட, ஆனால் உயிரோடு இருக்கும் வாக்காளர்களுடன் கலந்துரையாடும் வீடியோ ஒன்றை புதன்கிழமை அன்று சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த அரிய அனுபவத்திற்கு தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்தார்.

"வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான அனுபவங்கள் கிடைத்துள்ளன. ஆனால், 'இறந்தவர்களுடன்' தேநீர் அருந்தும் வாய்ப்பு ஒருபோதும் கிடைத்தது இல்லை. இந்த தனித்துவமான அனுபவத்திற்கு தேர்தல் ஆணையத்திற்கு நன்றி!" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

810
தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு!

பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் (SIR) தொடர்பான வழக்கில், இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் வாக்காளர்களுக்கு ஆதரவாகவே இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பல்வேறு ஆவணங்களை ஏற்பதன் மூலம் வாக்களிக்கும் உரிமையை எளிதாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜோய்மல்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு ஆதார் போன்ற குறிப்பிட்ட ஆவணங்களை மட்டும் கட்டாயமாக்காமல், பல்வேறு ஆவணங்களை ஏற்பதன் மூலம், வாக்களிக்கும் உரிமையை எளிதாக்கியுள்ளதாக குறிப்பிட்டது.

910
குழந்தைகளுக்காக 2,800 நாய்களைக் கொன்றேன்...

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 2,800 நாய்களைக் கொன்றதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்எல்சி எஸ்.எல். போஜேகவுடா கர்நாடக சட்ட மேலவையில் அதிர்ச்சி தரும் வாக்குமூலத்தை அளித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்து, நாய்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரும் முதல் மாநிலமாக கர்நாடகா இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

1010
பளிச் பளிச் பைதானி புடவை...

மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற 'பைதானி' சேலை லண்டன் விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. மகாராஷ்டிராவின் கலாச்சார விவகாரத்துறை அமைச்சர் அட்வ. ஆஷிஷ் ஷெலார் இங்கிலாந்து பயணத்தின் போது அளித்த முன்மொழிவைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரின் வருகையும் அருங்காட்சியகத்துடனான கலந்துரையாடல்களும் மராத்தா தளபதி ரகுஜி ராஜே போஸ்லேவின் வரலாற்று சிறப்புமிக்க வாளைப் பெறுவதற்காக லண்டனில் உள்ள ஷெலார், திங்கள்கிழமை விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்திற்குச் சென்றார்.

Read more Photos on
click me!

Recommended Stories