விஜய் கட்சிக்கு ஆளுநர் மாளிகை அழைப்பு! விருந்தில் பங்கேற்குமா த.வெ.க

Published : Aug 13, 2025, 05:33 PM IST

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தமிழக ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்துக்கு நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விஜய் கலந்து கொள்வாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

PREV
13
ஆளுநர் மாளிகை அழைப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு ஆளுநர் மாளிகை தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று, தமிழக ஆளுநர் மாளிகை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான அழைப்பிதழ்கள் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.

23
தேநீர் விருந்தில் த.வெ.க. பங்கேற்குமா?

அதன்படி, நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 26 குடியரசு தின விழா தேநீர் விருந்துக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்ற அடிப்படையில் அழைக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை தெரிவித்திருந்தது. இருப்பினும், அந்த விருந்தில் விஜய் கலந்து கொள்ளவில்லை.

33
விஜய் கட்சிக்கு மீண்டும் அழைப்பு

தற்போது மீண்டும் சுதந்திர தின தேநீர் விருந்துக்கு தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த தேநீர் விருந்தை காங்கிரஸ், சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories