இன்றைய TOP 10 செய்திகள்: அன்புமணி நீக்கம் முதல் சிங்கங்களின் மரணம் வரை

Published : Sep 11, 2025, 11:36 PM IST

பாமகவில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கம், குஜராத்தில் சிங்கங்களின் மரணம், நேபாள அரசியல் திருப்பம், ஆளுநர் மாளிகை நவராத்திரி கொலு, 21ஆம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் அணி என பல்வேறு செய்திகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன.

PREV
110
பாமக.வில் இருந்து அன்புமணி நீக்கம்

பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து வகையான பொறுப்பில் இருந்தும் அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.

“கட்சியின் விதிகளின் படி அன்புமணி செயல் தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார். செயல் தலைவர் மட்டுமல்லாது கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து வகையான பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார். இதன் பின்னர் அன்புமணியுடன், பாமக.வில் இருப்பவர்கள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. மீறி தொடர்பு வைக்கும் பட்சத்தில் அவர்களும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்.” என ராமதாஸ் தெரிவித்தார்.

210
ஐயாவிற்கு எதிராக சீறிய பாமக பாலு

பாமகவில் தந்தை மகன் இடையேயான அதிகார மோதல் காரணமாக அன்புமணி ராமதாஸ் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இந்த நீக்கம் கட்சி விதிகளுக்குப் புறம்பானது என அன்புமணி தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

310
டிரம்பின் தீவிர ஆதரவாளர் சுட்டுக் கொலை

அமெரிக்காவை மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த முறை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளர் தான் துப்பாக்கிச் சூடுக்கு இறையாக்கப்பட்டுள்ளார். டிரம்பின் முக்கிய ஆதரவாளரும், வலதுசாரி இளைஞர் செயற்பாட்டாளரும், செல்வாக்கு மிக்கவருமான சார்லி கிர்ச் புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார். யூட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிக்கொண்டிருந்தபோது, அனைவர் முன்னிலையிலும் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

410
உதயநிதியுடன் கை கோர்த்த டிடிவி தினகரன்!

மதுரையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: "இபிஎஸ் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது உண்மைதான். அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு இபிஎஸ் தான் காரணம். இபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளராக இருக்கும் வரை திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு என்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வஞ்சப் புகழ்ச்சியாக பேசி இருந்தாலும் அவரது கருத்திற்கு டிடிவி தினகரன் வரவேற்பு அளித்துள்ளார்" என்றார்.

510
ஓபிஎஸ்க்கு டக்குனு போன் போட்ட நயினார்!

பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ்ஸிடம் போனில் பேசிய நயினார் நாகேந்திரன் மீண்டும் கூட்டணிக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். ஓபிஎஸ் மனம் மாறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

610
செத்து மடியும் சிங்கங்கள்!

குஜராத் மாநில சட்டப்பேரவையில் புதன்கிழமை அன்று, மாநில அரசு அளித்த தகவலின்படி, ஆகஸ்ட் 1, 2023 முதல் ஜூலை 31, 2025 வரை இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 307 ஆசிய சிங்கங்கள் இறந்துள்ளன. இவற்றில், 51 சிங்கங்களின் இறப்பு இயற்கையானது (16.6%), அதேசமயம் 256 சிங்கங்களின் இறப்பு இயற்கைக்கு மாறான காரணங்களால் (83.4%) நிகழ்ந்துள்ளது என்று வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் முலுபாய் பேரா தெரிவித்தார்.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஷைலேஷ் பர்மரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், 2023-24 காலகட்டத்தில் 141 சிங்கங்களும், 2024-25 காலகட்டத்தில் 166 சிங்கங்களும் உயிரிழந்துள்ளதாகக் கூறினார். இதில், நோய் காரணமாக 151 சிங்கங்கள் (மொத்த இறப்புகளில் 49.2%) உயிரிழந்துள்ளன. அதேசமயம், சிங்கங்களுக்கு இடையேயான சண்டையால் 74 சிங்கங்கள் (24.1%) இறந்துள்ளன.

710
நேபாள அரசியலில் திருப்பம்

நேபாளத்தில் அதிகரித்து வரும் வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில், இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் பொறுப்பை பிரபல பொறியாளர் குல்மான் கிசிங் ஏற்றுக்கொண்டுள்ளார். காத்மாண்டு மேயர் பாலன் ஷா மற்றும் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி ஆகியோர் போட்டியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, நேபாள மின்சார ஆணையத்தின் தலைவர் குல்மான் கிசிங் இந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

810
ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு!

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் வருகிற செப்டம்பர் 22-ம் தேதி முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெறும் 'நவராத்திரி கொலு 2025' கொண்டாட்டங்களில் பார்வையாளர்களாகப் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

910
சச்சினுக்கு பதவி ஆசையா?

சச்சின் டெண்டுல்கர் பிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என அவரது மேலாண்மைக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 28-ம் தேதி பிசிசிஐ தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராஜீவ் சுக்லா தலைவர் பதவிக்கு முக்கிய போட்டியாளராகக் கருதப்படுகிறார்.

1010
21ஆம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் அணி

கிரிக்கெட்டின் பைபிள் என்று அழைக்கப்படும் விஸ்டன், 21ம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் அணி வெவனை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் இருந்து இரண்டு வீரர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

விஸ்டன் தேர்வு செய்த 21ஆம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் லெவன்: வீரேந்தர் சேவாக், கிரேம் ஸ்மித், ரிக்கி பாண்டிங், ஜாக் காலிஸ், ஏபி டிவில்லியர்ஸ், ஆடம் கில்கிறிஸ்ட், ஷேன் வார்ன், பேட் கம்மின்ஸ், டேல் ஸ்டெய்ன், ஜஸ்பிரித் பும்ரா.

Read more Photos on
click me!

Recommended Stories