Tamilnadu School Student: மாணவர்களுக்கு முக்கிய செய்தி! நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா? வெளியான தகவல்!

First Published | Nov 8, 2024, 12:53 PM IST

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டதால், நவம்பர் 1ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

Diwali Festivel

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் முதல் வாரத்தில் வருவது வழக்கம். ஆனால் இந்த முறை முன்கூட்டியே அதாவது அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டதை அடுத்து அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

Tamilnadu Government

எனவே இடையில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை கிடைத்தால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை சேர்ந்து மொத்தமாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.  இது தொடர்பாக அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு தீபாவளி மறுநாள் அதாவது நவம்பர் 1ம் தேதி பொது விடுமுறை தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இதையும் படிங்க: TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களுக்கு முக்கிய அப்டேட்! என்னென்னு தெரியுமா?
 

Latest Videos


School Holiday

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்: இந்த ஆண்டு தீபாவளியை அக்டோபர் 31ம் தேதியன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நவம்பர் 1ம் தேதி ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்தும் அரசு அலுவலகங்கள்,  பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 09ம் தேதி வேலை நாளாக தமிழக அரசு அறிவித்திருந்தது.  

இதையும் படிங்க: சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு குட்நியூஸ்! 60 நாட்கள்! போக்குவரத்து துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

School Working Day

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் அனைத்து அரசு, தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மாநகராட்சி பள்ளிகள் நவம்பர் 9ம் தேதி முழு நேரம் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்திருந்தது. இது தொடர்பாக மாவட்ட கல்வித்துறை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் நாளை பள்ளிகள் முழுநேரம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!