மாதம் 8ஆயிரம் ரூபாய் உதவித்தொகை தரும் தமிழக அரசு.! வெளியான சூப்பர் அறிவிப்பு

First Published | Nov 8, 2024, 12:40 PM IST

தமிழக அரசு சார்பாக நிதி உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஐடிஐ படித்தவர்களுகாக மாதம் 8000 ரூபாய் உதவித்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது.

தமிழக அரசின் வேலைவாய்ப்பு

தமிழக அரசு சார்பாக வேலைவாய்ப்பிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தனியார் நிறுவனங்களோடு இணைந்து தமிழக அரசு வாரந்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. இந்த முகாம் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

மேலும் அரசு பணியில் இணைபவர்களுக்காகவும் அரசு பணியாளர் தேர்வு வாரியம் மூலமாகவும் தேர்வு நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் ஐடிஐ படித்தவர்களுக்காக தொழிற் பழகுநர் பயிற்சி முகாமை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஐடிஐ படித்தவர்களுக்கு தொழிற்பயிற்சி

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், சென்னை மற்றும் இந்திய அரசு, தென்மண்டல திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு இயக்ககம் இணைந்து ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி முகாம் வருகிற 11.11.2024 நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், சென்னை மற்றும் இந்திய அரசு, தென்மண்டல திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு இயக்ககம் இணைந்து ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி முகாம் நடத்திட உள்ளது.  
 

Tap to resize

 தேசிய தொழிற் பழகுநர் முகாம்

பல்வேறு தொழிற் பிரிவுகளை சேர்ந்த பயிற்சியாளர்களுக்கு தொழிற் பழகுநர் பயிற்சி வழங்குவதற்காக, மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் முகாம் (PM National Apprenticeship Mela)வருகிற  11.11.2024 அன்று காலை 9.00 மணியளவில்  ஆர்.கே.நகர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் (வடசென்னை அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில்) நடைபெற உள்ளது. 

இதில் அரசு மற்றும் தனியார் தொழிற் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற் பழகுநர் பயிற்சி வழங்க ஐ.டி.ஐ. படித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் 8, 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை தொழிற் பழகுநராக தேர்வு செய்ய உள்ளனர்.

மாதம் 8ஆயிரம் ஊக்கத்தொகை

தற்போது தொழிற் பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக குறைந்த பட்சம் ரூ.8000/- மற்றும் தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் (National Apprenticeship Certificate) வழங்கப்படும். இதுவரை தொழிற் பழகுநர் பயிற்சி (NAC) முடிக்காத அரசு. தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் www.apprenticeshipindia.gov.in இணையதள முகவரியில் பதிவு செய்து, அசல் கல்வி சான்றிதழ்களுடன் இம்முகாமில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Latest Videos

click me!