ஆம்புலன்ஸை விட படு வேகம்.! வெளிநாடுகளுக்கு இணையாக புதிய மருத்துவ திட்டம்.! கலக்கும் தமிழக அரசு

Published : Nov 08, 2024, 07:56 AM ISTUpdated : Nov 08, 2024, 08:02 AM IST

உடல்நிலை பாதிக்கப்பட்டு அவசர தேவைக்காக தவிப்பவர்களுக்கு ஆம்புலன்ஸ் செல்ல முடியாத இடங்களுக்கும் சென்று மருத்துவ சிகிச்சை உடனடியாக கிடைக்கும் வகையில் புதிய திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. 

PREV
15
ஆம்புலன்ஸை விட படு வேகம்.! வெளிநாடுகளுக்கு இணையாக புதிய மருத்துவ திட்டம்.! கலக்கும்  தமிழக அரசு

அவசரகால மருத்துவ பயன்

மக்களின் அத்தியாவசிய தேவை சுகாதாரமாகும். அந்த வகையில் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் திட்டமானது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் போன் செய்த அடுத்த சில நிமிடங்களிலையே ஆம்புலன்ஸ் வந்து விடும். அந்த அளவிற்கு 108 அவரச ஊர்தி சேவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் ஆம்புலன்ஸை விட இன்னும் சீக்கிரமாக மருத்துவ வசதி அளிக்க புதிய திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. 

25
108 ambulance

108 ஆம்புலன்ஸ் பைக் சேவை

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அணுகுவதற்கு கடினமான மற்றும் போக்குவரத்து வசதியற்ற மலை கிராமப்பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் இதர மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் 25 இருசக்கர அவசர கால மருத்துவ வாகனங்கள் 1.60 கோடி ரூபாய் செலவில் வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த வாகனங்கள் 108 அவசரகால ஊர்திகளுக்கு இணைப்பு வாகனங்களாக (Feeder Ambulance) செயல்பட்டு, நோயாளிகளை மருத்துவமனைக்கு துரிதமாக அழைத்துச் செல்ல வழிவகுக்கும் என கூறப்பட்டுள்ளது.

35

மலைப்பகுதி மக்களுக்கு பெரும் உதவி

மேலும்  மாநிலம் முழுவதும் உள்ள எளிதில் அணுக முடியாத மலைக் கிராமங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர்களின் சுகாதார சேவையை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதி இல்லாத மலைப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு குறித்த நேரத்தில் உரிய மருத்துவ சேவை கிடைப்பதை இந்த இரு சக்கர அவசரகால வாகன சேவை உறுதி செய்யும் எனவும்,  நவீன முறையில் உரிய மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்ட இரு சக்கர அவசரகால வாகன சேவையானது, தற்போதுள்ள 1353 அவசரகால 108 ஊர்தி சேவையினுள் அடங்கும்.. 

45

கடைநிலை மக்களுக்கும் சிகிச்சை

இந்த இரு சக்கர அவசரகால வாகனங்களின் சேவை கடைநிலை பொதுமக்கள்  வரை சென்றடையும். வகையில் வடவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாகனமானது உடனடி மருத்துவ சிகிச்சை அளித்து பயனாளிகளை மேல் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்பட்டுள்ளது

55

சேவையின் சிறப்பம்சங்கள் தாய்சேய்நல சுகாதார சேவைகள்:

மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பு, மகப்பேறு, பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் தாய்சேய்நல மருத்துவ பிரசவ பரிசோதனைகளுக்கான சேவை.

அவசரகால மருத்துவப் பராமரிப்பு:

போக்குவரத்து வசதியற்ற பகுதிகளில் உள்ள பயனாளிகளை உரிய 108 அவசர கால வாகனங்கள் உள்ள இடங்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கான இணைப்பு வாகனமாக இவ்வாகனங்கள் செயல்படும்.

எளிதில் அணுக முடியாத, 10 மாவட்டங்களில் உள்ள மலைக் கிராமங்களை தேர்ந்தெடுத்து, அங்கு வாழும் பழங்குடியின மக்களுக்கும் மற்றும் இதர மக்களுக்கும் இந்த இருசக்கர முதலுதவி வாகனங்கள் உடனடி சேவை செய்யும்.

மருத்துவ மற்றும் எதிர்பாராத அவசரநிலைகளில் உதவுவதற்கு ஏற்றவாறு இவ்வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இருசக்கர அவசரகால வாகனத்தில் ஜிபிஎஸ் (GPS) கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
 

Read more Photos on
click me!

Recommended Stories