தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் பனிப்பொழிவும் நிலவுகிறது. இந்நிலையில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் இதன் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க: TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களுக்கு முக்கிய அப்டேட்! என்னென்னு தெரியுமா?
இந்நிலையில் அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது நள்ளிரவு 1 மணி சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.