சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு குட்நியூஸ்! 60 நாட்கள்! போக்குவரத்து துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

First Published | Nov 7, 2024, 8:15 PM IST

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கூடுதல் பேருந்துகள் இயக்க அனுமதி பெறப்பட்டுள்ளது, மேலும் குழுக்களுக்கு வாடகை பேருந்துகளும் வழங்கப்படும்.

கார்த்திகை மாதம் வந்துவிட்டால் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிவித்து பக்தர்கள் விரதத்தை துவக்குவது வழக்கம். நவம்பர் 16 முதல் ஜனவரி 16 வரை தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் செல்வார்கள். குறிப்பாக ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். இந்நிலையில் சபரிமலை பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐய்யப்பன் ஆலயத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்கனின் போது தமிழகத்திலிருந்து ஐய்யப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

Tap to resize

 (சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி 27.12.2024 முதல் 30.12.2024 மாலை 5.00 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் 26.12.2024 முதல் 29.12.2024 வரை இச்சிறப்புப் பேருந்து இயக்கப்படமாட்டாது) இந்த வருடம் பக்தர்கள் கூடுதலாக பயணம் செய்ய முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றினை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் இதர இடங்களிலிருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்குவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பேருந்துகளை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 மேலும் குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும். 60 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்புப் பேருத்துகளுக்கு Online மூலமாக. www.tnstc.in மற்றும் TNSTC Official app ஆகிய இணையத்தளங்களில் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு 9445014452, 9445014424 மற்றும் 9445014463 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!