Government School: தமிழக அரசு கொடுத்த ரூ.5.20 கோடி! அந்த 26 அரசு பள்ளிகள்! எவ்வாறு செலவு செய்யணும் தெரியுமா?

First Published | Nov 7, 2024, 5:54 PM IST

தமிழகத்தில் 26 அரசுப் பள்ளிகளில் பசுமை வளாகத் திட்டத்தை செயல்படுத்த ரூ.5.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சூரிய மின்சக்தி, சொட்டுநீர் பாசனம், தோட்டம் பராமரிப்பு போன்ற பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் திறனை ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் மாணவர்களிடம் ஒளிந்திருக்கும் திறன்களை வெளிப்படுத்தும் விதமாக கலை திருவிழா, விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படுகின்றன. மேலும் பள்ளி வளாகத்தை சிறப்பான முறையில் பாதுகாக்கும் வகையில் பசுமை பள்ளி திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, மழைநீர் சேகரிப்பு, காய்கறி தோட்டங்கள் அமைத்தல், கழிவுநீர் மறுசுழற்சி, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும். இவை அனைத்தையும் மாணவர்களே மேற்கொள்வது கூடுதல் சிறப்பு. இந்நிலையில் தமிழகத்தில் 26 அரசுப் பள்ளிகளில் பசுமை வளாகத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.5.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அதை எவ்வாறு செலவு செய்ய வேண்டும் என்ற வழிகாட்டு முறைகள் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: Government school: பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை! யாருக்கெல்லாம் கிடைக்கும்! வெளியான முடிவுகள்!

Latest Videos


இதுகுறித்து சுற்றுச்சூழல் துறை செயலர் பி.செந்தில் குமார் வெளியிட்ட அரசாணையில்: முதல்வரின் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் குறிக்கோளை செயல்படுத்துவதற்கு தேவையான சூழல் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக பசுமை பள்ளிக்கூட திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி 2022-23 மற்றும் 2023-24-ம் கல்வியாண்டுகளில் 71 பள்ளிகள் பசுமைப் பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டு ரூ.15 கோடியில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

தொடர்ந்து 2024-25-ம் கல்வியாண்டில் 100 பள்ளிகளுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று கடந்த சட்டமன்றக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் முதல்கட்டமாக 26 பள்ளிகளில் பசுமைப் பள்ளி திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் ரூ.5.20 கோடி தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய நிதியில் இருந்து பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்வான 26 பள்ளிகளிலும் சூரிய மின்சக்தி தகடு, சொட்டு நீர் பாசனம், தோட்டம் பராமரிப்பு மற்றும் பசுமை விழிப்புணர்வு உள்ளிட்ட பணிகளுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க:  TN Government Schools: அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பறந்த முக்கிய உத்தரவு! என்னென்னு தெரியுமா?

இதில் சூரிய மின்தகடு, பேட்டரி பராமரிப்புக்காக 2 ஆண்டுக்கு ரூ.6 லட்சம், ஆழ்துளை கிணறு, சொட்டு நீர் பாசனம் அமைக்க ரூ.4.5 லட்சம், தோட்டம் பராமரிப்புக்கு மாதம் ரூ.9 ஆயிரம் வீதம் 2 ஆண்டுகளுக்கு ரூ.2.16 லட்சம், மழைநீர் சேகரிப்புக்கு ரூ.1.5 லட்சம், தோட்டம் அமைக்க ரூ.2.5 லட்சம், பசுமை விழிப்புணர்வுக்கு ரூ.2 லட்சம், இதர செலவுகளுக்கு 1.34 லட்சம் என பங்கீட்டு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!