அமைச்சரே குளத்தில் தாமரை மலர்ந்ததுக்கே இப்படி அலறுகிறீர்களே! சேகர் பாபுக்கு தமிழிசை கொடுத்த பதிலடி இதுதான்!

First Published | Nov 7, 2024, 4:44 PM IST

Sekar babu Vs Tamilisai: போரூரில் ஈரநிலை பசுமை பூங்காவில் தாமரை பூக்களை அகற்ற உத்தரவிட்ட அமைச்சர் சேகர்பாபுவிற்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். 

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் போரூரில் 16.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.60 கோடி மதிப்பில் ஈரநிலை பசுமை பூங்கா அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பூங்காவில் கருங்கல் நடைபாதை, செங்கல் நடைபாதை, விளையாட்டு மைதானம், சிறுவர் விளையாட்டுத் திடல், திறந்தவெளி உடற்பயிற்சி மைதானம், சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பூங்கா அருகில் குளத்தில் மலர்ந்திருந்த தாமரைப் பூக்களை பார்த்த அமைச்சர் சேகர்பாபு குளத்தில் கூட தாமரை மலரக்கூடாது என கிண்டலாக கூறியது மட்டுமல்லாமல் அவற்றை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதுதொடர்பான வீடியோ வைரலானது. 

Tap to resize


இந்நிலையில் அரசு அமைக்கும் பூங்காவிலேயே  தாமரை வேண்டாம் என் ஆவேசப்படும் நீங்கள். தாமரை அரசமைக்கும் காலத்தையும் பார்க்கத்தான் போகிறீர்கள் என அமைச்சருக்கு தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார். 

துதொடர்பாக முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: அரசு அமைக்கும் பூங்காவில்.. குளத்தில் கூட தாமரை வளரக்கூடாது.. என ஆவேசப்பட்டு இருக்கிறார்  தமிழக அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் சேகர் பாபு அவர்கள்... குளத்தில் தாமரை மலர்வதைக் கண்டே அலறுகிறீர்களே...  வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரத்தான் போகிறது.. அதைக் கண்டு நீங்கள் அலறத்தான் போகிறீர்கள்.

அரசு அமைக்கும் பூங்காவிலேயே  தாமரை வேண்டாம் என ஆவேசப்படும் நீங்கள்.. தாமரை அரசமைக்கும் காலத்தையும் பார்க்கத்தான் போகிறீர்கள்.... நீங்கள் காலம் காலமாக கூவத்தை சுத்தம் செய்வோம் என மக்களை ஏமாற்றுவது மாற்றி கூவத்தையும் சுத்தப்படுத்தி அங்கேயும் தாமரை மலர மலர் முகத்துடன் மக்கள் காணத்தான் போகிறார்கள்... இது வெறும் சத்தமல்ல சத்தியம்  சாத்தியம்... இலட்சியப்ப பற்றுள்ள தொண்டர்களாலும் லட்சக்கணக்கில் சேர்ந்த புதிய உறுப்பினர்களாலும் இது சாத்தியம் என்பது சத்தியம் என தமிழிசை தெரிவித்துள்ளார். 

Latest Videos

click me!