விஜய் அரசியல் என்டீரி! ஆட்டம் காணும் நாம் தமிழர் கட்சி! முக்கிய நிர்வாகி விலகலால் சீமான் அதிர்ச்சி!

First Published | Nov 7, 2024, 7:10 PM IST

நாம் தமிழர் கட்சியின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். கட்சியின் செயல்பாடுகளில் அதிருப்தி காரணமாக மருத்துவப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரும் விலகியுள்ளார்.

ஒவ்வொரு தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வந்த நிலையில் நாம் தமிழர் கட்சி மட்டும் சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தல் என அனைத்து விதமான தேர்தலில் தனித்து போட்டியிட்டு வந்தது. தனித்து போட்டியிட்டு வந்தாலும் குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை சீமான் பெற்று வந்தார். தமிழகத்தில் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த கட்சியாகவும்  நாம் தமிழர் கட்சி இருந்து வந்தது. 

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விவசாய சின்னம் கிடைக்காததால் சுயேட்சை சின்னமான மைக் சின்னத்தில் போட்டியிட்டு குறுகிய காலத்தில் மக்களிடம் கொண்டு சென்று  8.9 % வாக்குகளை பெற்றிருந்தார். இந்நிலையில் சீமானின் செயல்பாட்டால் அதிருப்தி அடைந்து மாநில நிர்வாகிகள் முதல் மாவட்ட செயலாளர்கள் வரை அடுத்தடுத்து விலகி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பெண்களை சீரழித்த சீமான்! நீங்கள் தான் கூமுட்டை! விஜய் அண்ணனுக்காக ரீ என்ட்ரி கொடுத்த விஜயலட்சுமி!

Tap to resize

கடந்த மாதம் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினர். மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கு, மத்திய, கிழக்கு என 3 மாவட்ட தலைவர்களும் கட்சியில் செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்து விலகினர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்து வந்த இளவஞ்சியும் விலகியுள்ளார். 

நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து வந்த இளவஞ்சி கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திருவிக நகரில் போட்டியிட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீமான் முன்னிலையில் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். 

இதையும் படிங்க: TVK Vs NTK: விஜய்யின் சூறாவளியால்! சிக்கி சின்னபின்னமாகும் நாம் தமிழர் கட்சி! தெறித்து ஓடும் மூத்த நிர்வாகிகள்

நாம் தமிழர் கட்சியில் சட்டமன்ற தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட வேண்டும் என்றால் 50 சதவீதம் பெண்கள், 50 சதவீதம் ஆண்களுக்கு என்று சரிக்கு சரி பங்கு வழங்கப்படுகிறது. ஆனால் கட்சியில் உள்ள பதவிகள் என்று எடுத்துக்கொண்டால் இப்படி வழங்கப்படுவதில்லை என்று இளவஞ்சி குற்றச்சாட்டு வைத்திருந்தார். குறிப்பாக கட்சியின் பொதுச்செயலாளராக பெண் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் என சீமான் தலைமையில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்திலேயே இளவஞ்சி கூறியிருந்தது அப்போதே சலசலப்பை ஏற்படுத்தியது.

நாம் தமிழர் கட்சியில் விலகிய இளவஞ்சி உள்ளிட்ட நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகம் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest Videos

click me!