ரூபாய் 3 லட்சத்தை மானியமாக தூக்கிகொடுக்கும் தமிழக அரசு.! புதிய திட்டம் அறிமுகம்-யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.?

Published : Nov 08, 2024, 07:01 AM ISTUpdated : Nov 08, 2024, 07:07 AM IST

தமிழக மக்கள் சொந்த் தொழில் செய்து முன்னேறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் முதல்வர் மருந்துகள் அமைக்க 3 லட்சம் மானியம் வழங்கப்படவுள்ளது. 

PREV
15
ரூபாய் 3 லட்சத்தை மானியமாக தூக்கிகொடுக்கும் தமிழக அரசு.! புதிய திட்டம் அறிமுகம்-யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.?
tamilnadu government

அதிக விலையில் மருந்துகள்

தமிழக அரசு சார்பாக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மக்களுக்கு உதவிடும் வகையில் குறைந்த விலையில் கூட்டுறவு துறை சார்பாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடுத்ததக்கட்டமாக அரசு மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளித்தாலும் ஒரு சில மருந்துகள் தனியார் மெடிக்கலில் வாங்கும் நிலை உள்ளது.

இதே போல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் மருந்துகள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பாக குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகம் அமைக்கப்படவுள்ளது.

25
medical practice

1000 முதல்வர் மருந்தகம்

இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி, சுதந்திர தினவிழா உரையில், "பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்" என முதலமைச்சர் அறிவித்தார்.  இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள B.Pharm/D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

35
medical shop

விண்ணப்பிப்பது எப்படி.?

விண்ணப்பங்களை  www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில் முனைவோர் வருகிற நவம்பர் 20ஆம் தேதி வரை   இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இணைந்து முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு 110 சதுரஅடிக்கு (10Sqm) குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த இடம் இருக்கும் பட்சத்தில்  அதற்கான சான்றிதழ்களான சொத்துவரி ரசீது (அல்லது) குடிநீர்வரி ரசீது (அல்லது) .

45

3 லட்சம் ரூபாய் மானியம்

மின் இணைப்பு ரசீது, வாடகை இடம் எனில் இடத்திற்கான உரிமையாளரிடம் இடம் ஒப்பந்தப்பத்திரம் (Rental Agreement Documents) பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு அரசு மானியம் 3 இலட்சம் ரூபாயை  இரண்டு தவணைகளாக ரொக்கமாகவும் மருந்துகளாகவும் வழங்கப்படும் எனவும்  தொழில் முனைவோருக்கு முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு கூடுதல் நிதி தேவைப்பட்டால்  கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

55
Pharmacy

ஊக்கத்தொகை வழங்கப்படும்

மேலும் TABCEDCO, THADCO மற்றும் TAMCO பயனாளிகளும் இதில் விண்ணப்பிக்கலாம். தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்குப் பயிற்சி அளித்து முதல் தவணை மானியத்தொகை ஒரு லட்சத்து 50 ஆயிரம்  விடுவிக்கப்படும். முதல்வர் மருந்தகம் அமைக்க தேர்வு செய்யப்படும் தொழில் முனைவோர் முதல்வர் மருந்தகத்திற்கு உட்கட்டமைப்பு வசதிகளான ரேக்குகள், குளிர்சாதனப்பெட்டி, ஏசி மற்றும் மருந்துகள் வைப்பதற்கான பெட்டிகள் நிறுவப்பட்ட பிறகு இறுதிக்கட்ட மானியம் 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு மருந்துகளாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகத்தில் விற்பனைக்கு ஏற்ற ஊக்கத்தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories