Tamilnadu Rain
தமிழகத்தில் ஃபெங்கல் புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து பெரும் சேதத்தை ஏற்பத்தியுள்ளது. ஒரே நாளில் கிருஷ்ணகிரி, மயிலம் உள்ளிட்ட இடங்களில் 50 செ.மீ. மழையும், புதுச்சேரியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு 49 செ.மீ., மழை பதிவாகி இருந்தது.
School Holiday New
இதனால் இந்த மாவட்டங்கள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்ததும் மட்டுமல்லாமல் பொதுமக்கள் தண்ணீரில் தத்தளித்தனர். இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த சில நாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டது.
Anbil Mahesh
இதனிடையே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பள்ளிகளின் தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
School Holiday
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் பழனி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
pondicherry School
அதேபோல் புதுச்சேரியில் மழை வெள்ளம் பாதிப்பால் முகாமாக மாற்றப்பட்டுள்ள அரசு பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை. மற்ற ஏனைய அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நாளை வழக்கம் போல் செயல்படும்.
Cuddalore School
மேலும் கடலூரில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் காரணமாக பண்ருட்டி, அண்ணாகிராமம், கடலூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.