இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக அதாவது நவம்பர் 23ம் தேதி சனிக்கிழமை பள்ளி முழு வேலை நாளாகும் என அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால், அன்றைய தினம் வாக்காளர் முகாம் (சேர்க்கை, நீக்கம் மற்றும் சரிபார்ப்பு) நடைபெறுவதையொட்டி வேலை நாள் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்திருந்தார்.