Chennai rain
வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்தது. நேற்று காலையும் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை விடாமல் வெளுத்து வாங்கியது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை இரண்டு நாட்களுக்கு விடுக்கப்பட்டதை அடுத்து இந்த 4 மாவட்டங்கள் உட்பட நேற்று 11 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
Chennai rain
இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 280 கி.மீ தொலைவிலும், புதுவைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 320 கி.மீ தொலைவிலும், ஆந்திரப் பிரதேசம் நெல்லூருக்கு தென்கிழக்கே சுமார் 370 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணிநேரத்தில் 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. தொடர்ந்து மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுவைக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகே கரையை கடக்கக்கூடும்.
அதில், சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடுவது குறித்து நாளை காலை முடிவு செய்யப்படும். இன்று முழுவதும் மழை பெய்யாததால் இரவு பெய்யக்கூடிய மழையைப் பொறுத்து நாளை முடிவெடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பகுதியில் நிவாரண முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து மண்டல அலுவலர்கள் முடிவு செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.