தமிழகத்தில் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு துறைகள் இருந்தாலும் வருமானத்தை கொட்டி கொடுக்கும் துறையாக டாஸ்மாக் நிறுவனம் இருந்து வருகிறது. அரசு இயந்திரமே இந்த வருமானத்தில் தான் இயங்குவதாக கூறப்படுகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 121 கோடியும், மாதம் 3,698 கோடியும், ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது.