Vegetables : மீண்டும் உயர்ந்த தக்காளி விலை.! கோயம்பேட்டில் காய்கறிகளின் திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

First Published Jul 16, 2024, 8:48 AM IST

காய்கறிகள் சென்னை கோயம்பேடு சந்தைக்கு கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில், பருவமழை தீவிரம் அடைந்துள்ள காரணத்தால் கன மழை பெய்து வருகிறது. இதனால் காய்கறிகளின் விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் காய்கறிகளின் வரத்து குறைந்ததையடுத்து விற்பனை விலை உயர்ந்துள்ளது. 

தக்காளி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 35 முதல் 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 55 முதல் 65 ரூபாய்க்கும்,  தக்காளி விலையைப் பொறுத்தவரை கடந்த வாரம் ஏறி இறங்கி வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அந்த வகையில் ஒரு கிலோ தக்காளி 55 முதல் 65 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.  பச்சை மிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

பாகற்காய் விலை என்ன.?

நெல்லிக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மின் கட்டண உயர்வால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? எந்தெந்த யூனிட்டுக்கு எவ்வளவு உயர்வு? இதோ முழு தகவல்..!
 

Latest Videos


காலிபிளவர் விலை என்ன.?

முட்டைக்கோஸ் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்பனையாகிறது. காலிஃப்ளவர் ஒன்று 30 முதல் 40 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 1 கிலோ 80 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

RAIN : அடுத்த 3 மணி நேரத்திற்கு சம்பவம் காத்திருக்கு.! கொட்டித்தீர்க்க போகுது மழை- 27 மாவட்டங்களுக்கு அலர்ட்
 

பூசணி விலை என்ன.?

இஞ்சி ஒரு கிலோ 130 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும்,  புடலங்காய் கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

click me!