இவ்வளவு கம்மியா தக்காளி விலை.! போட்டி போட்டு அள்ளிச்செல்லும் மக்கள்- ஒரு கிலோ இவ்வளவு தானா.?

Published : Sep 29, 2025, 08:33 AM IST

Tomato and onion price : புரட்டாசி மாதத்தில் சைவ உணவுகளின் தேவை அதிகரித்துள்ள நிலையில், தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை வரத்து அதிகரிப்பால் குறைந்துள்ளது. குறைந்த விலையில் காய்கறிகள் விற்கப்படுவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

PREV
15
சமையலும் காய்கறிகளும்

சமையலில் முக்கிய தேவையாக இருப்பது காய்கறிகள், அதிலும் தற்போது புரட்டாசி மாதம் என்றாலே அசைவ உணவுகளை தவிர்த்து சைவமாக மாறிவிடுவார்கள். எனவே தினந்தோறும் பெரும்பாலானவர்களின் வீடுகளில் சிக்கன், மட்டன், மீன் வகைகளை தவித்து காய்கறிகள் கூட்டு, சாம்பார், ரசம், காய்கறி பொரியல் என மாறிவிடுவார்கள். 

எனவே மக்களின் பார்வை காய்கறிகள் பக்கம் திரும்பியதால் விலையும் அதிகரிக்கும். அந்த வகையில் சமையலில் முக்கிய காய்கறியாக இருப்பது தக்காளி மற்றும் வெங்காயம்.

25
புரட்டாசியில் மக்களுக்கு ஜாக்பாட்

எனவே காய்கறி சந்தையில் மக்கள் எந்த காய்களை வாங்குகிறார்களோ தக்காளி மற்றும் வெங்காயத்தை அதிகளவு வாங்குவார்கள், எனவே தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை மட்டும் உயர்ந்தால் இல்லத்தரசிகளின் நிலைமை அதோ கதி தான். 

ஆனால் இல்லத்தரசிகளை குளிர்விக்கும் வகையில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையானது சரிந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிலோ தக்காளி கடந்த இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பாக 80 ரூபாயை தாண்டியது. இதே போல பெரிய வெங்காயத்தின் விலையும் 50 ரூபாயை தொட்டது. ஆனால் தற்போது வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிந்துள்ளது.

35
கொட்டிக்கிடக்கும் தக்காளி

ஒரு கிலோ தக்காளி 10 முதல் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 50 ரூபாய்க்கு 4 கிலோ தக்காளியானது சென்னையில் பல்வேறு இடங்களில் கூவி கூவி விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் தரமான தக்காளி ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இதே போல வெங்காயத்தின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே புரட்டாசி மாதத்தில் இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட் அடித்தது போல பை நியை அள்ளிச்செல்கிறார்கள். இதே போல காய்கறிகளின் விலையும் சற்று குறைந்துள்ளது.

45
பச்சை காய்கறிகளின் விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 18 முதல் 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

55
கேரட், பீட்ரூட் விலை என்ன.?

காலிஃப்ளவர் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories