tomato onion
தக்காளி விலை உயர்வும் பொதுமக்கள் பாதிப்பும்
சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பெய்த கன மழையின் காரணமாக தக்காளி மற்றும் வெங்காயத்தின் வரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
இதனால் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. வெங்காயத்தின் விலையோ ஒரு கிலோ 70 முதல் 80 ரூபாய் வரை சென்றது. இதனால் இல்லத்தரசிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். கிலோ கணக்கில் வாங்கப்பட்ட நிலையில் அரை கிலோ அளவிற்கே வாங்கும் நிலை உருவானது.
TOMATO
திடீரென குறைந்த தக்காளி விலை
இதனையடுத்து தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் களம் இறங்கியது. அந்த வகையில் ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கும், வெங்காயம் 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஒரு சில இடங்களில் விலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருந்த போதும் பல இடங்களில் காய்கறிகளின் விலை உச்சத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கும் சமயத்தில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது அதற்கு மாற்றாக காய்கறிகளின் விலை குறைந்து வருகிறது.
TOMATO
4 கிலோ தக்காளி 100 ரூபாய்
சென்னையில் பல்வேறு இடங்களில் லாரிகளில் கொண்டு வந்து தக்காளி விற்பனை நடைபெறுகிறது. அந்த வகையில் 4 கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெங்காயத்தின் விலையும் ஓரளவிற்கு குறைந்துள்ளது. இதனால் வாய்ப்பு கிடைக்கும் போதே வாங்கிக்கொள்வது என 4 கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு பொதுமக்கள் போட்டி போட்டி வாங்கி செல்கின்றனர்
vegetable price
கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 25 முதல் 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 50 முதல் 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு, பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், உருளை கிழங்கு ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
vegetable price
இஞ்சி விலை என்ன.?
கேரட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 15 ரூபாய் முதல் 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 1 கிலோ 30 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
பீன்ஸ் ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 150ரூபாய்கும், மாங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு 40 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது