"உன்னால் மட்டுமே முடியும்"; விஜய் கொடுத்த ஊக்கம் - தரமான த.வெ.க கொள்கை பாடலை எழுதியது யார் தெரியுமா?

First Published | Oct 28, 2024, 5:53 PM IST

TVK Policy Song : தளபதி விஜய் நேற்று தனது தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்தி முடித்து இருக்கிறார். தமிழகத்தை தாண்டி இந்திய அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறார் விஜய்.

thalapathy Vijay

தமிழ் சினிமாவில் கடந்த பல ஆண்டுகளாகவே முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் தளபதி விஜய். சுமார் 200 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறக்கூடிய அளவுக்கு தனது கலை பயணத்தில் உச்சகட்ட புகழோடு வளம் வந்த அவர், பலரும் எதிர்பார்த்த வகையில் தன்னுடைய அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட்டார். அதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியும், அதற்கான பாடலும் வெளியானது. இந்த சூழலில் அக்டோபர் 27ஆம் தேதி மாநில மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

கண்கலங்கி நின்ற குரூப் டான்சர்கள்; பாண்டியராஜன் செய்த நெகிழ்ச்சி சம்பவம் - எந்த படத்தில் தெரியுமா?

TVK Vijay

அதன்படியே பிரம்மாண்டமான ஏற்பாடுகளோடு, கொஞ்சம் கூட பிசிறு தட்டாமல் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே தொடங்கி மாலை 7 மணியோடு தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்ற முடிந்தது. தளபதி விஜயின் அரசியல் கட்சியினுடைய கொள்கையும், செயல் திட்டமும் தமிழக மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது என்றே கூறலாம். அது மட்டும் அல்ல பாஜக மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தை நேரடியாகவே தளபதி விஜய் தாக்கி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தளபதி விஜய் ஒரு அரசியல் தலைவரை போல அல்லாமல் சினிமாக்காரரை போல தான் நடந்து கொண்டார் என்று சில விமர்சனங்கள் வந்தாலும், தளபதி விஜயின் ரசிகர்கள் மத்தியில் இந்த மாநாடு மிகப்பெரிய வெற்றியை சந்தித்திருக்கிறது.

Tap to resize

Therukural Arivu

இந்த சூழலில் நேற்று தளபதி விஜயின் அரசியல் கட்சியின் மாநில மாநாடு நடந்த நிலையில், அரங்கத்திற்கு வந்த தளபதி விஜய், 100 அடி உயர கம்பத்தில் கட்டப்பட்டிருந்த தனது கட்சியின் கொடியை ரிமோட் மூலம் இயக்கி பறக்க விட்டார். அதன் பிறகு இக்கட்சிக்கான கொள்கை பாடல் ஒளிபரப்பப்பட்டது. ரசிகர்கள் பெரிய அளவில் அதை விரும்பியதால், தொடர்ச்சியாக அந்த பாடல் இரண்டு முறை ஒளிபரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் அந்த பாடலை எழுதியது யார் என்கின்ற கேள்விகள் எழுந்து வந்த நிலையில் தற்போது, தான் அந்த பாடலை எழுதியதாகவும், தளபதி விஜய் கொடுத்த ஊக்கத்தின் காரணமாகத்தான் அதை எழுதியதாகவும் பிரபல பாடல் ஆசிரியர் தெரிவித்திருக்கிறார். 

TVK Song

கடந்த 2018 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தில் ஒலித்த உரிமையை மீட்போம் என்கின்ற பாடலின் மூலம் பாடலாசிரியராக தமிழ் திரையுலகில் களம் இறங்கியவர் தான் தெருக்குறள் அறிவு. தொடர்ச்சியாக தமிழில் "வடசென்னை", "வந்தா ராஜாவா தான் வருவேன்", "நட்பே துணை", "பட்டாஸ்", "நாடோடிகள் 2" மற்றும் "நான் சிரித்தால்" போன்ற பல திரைப்படங்களில் சிறப்பான பல பாடல்களை இவர் எழுதியிருக்கிறார். 

இந்த சூழலில் தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பாடலையும் இவர் தான் எழுதியிருக்கிறார். ஏன் என்னை இதற்காக தேர்வு செய்தீர்கள் என்று தளபதி விஜய்யிடம் தான் கேட்டபொழுது "உன்னால் மட்டுமே இதை எழுத முடியும் என்று, தனக்கு ஊக்கம் அளித்ததாகவும்" தனது ட்விட்டர் பக்க பதிவில் கூறி இருக்கிறார் அறிவு.

தலைவர் மாடுலேஷனில் மாநாட்டை தெறிக்க விட்ட தளபதி! விஜய்க்கு இருந்த தைரியம் ஏன் ரஜினிக்கு இல்லை?

Latest Videos

click me!