அதிகரிக்கும் தக்காளி விலை
தங்கத்தைப்போன்று தக்காளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதன் காரணமாக தக்காளியை வாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். கடந்த மாதம் வரை ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 40, 60, 100 என உயர்ந்த தக்காளி விலை 200ரூபாயை நேற்று தொட்டது.
இதன் காரணமாக வீட்டில் தக்காளி இல்லாத சமையலை செய்ய இல்லத்தரசிகள் மாற்று வழியை தேட தொடங்கியுள்ளனர். மேலும் ஓட்டல்களிலும் தக்காளி சாதம், தக்காளி தொக்கு, தக்காளி சட்னி போன்ற உணவுகளை தயாரிப்பதையும் நிறுத்திக்கொண்டுள்ளனர்.