Tomato: தாறுமாறாக எகிறும் தக்காளி விலை! இன்று முதல் இந்த 500 இடங்களில் 60 ரூபாய்க்கு கிடைக்குமாம்!

First Published | Aug 1, 2023, 7:45 AM IST

தமிழகத்தில் இன்று முதல் 500 நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- இந்த ஆண்டு கோடையில் கடும் வெப்பம் நிலவியதால் விவசாயிகள் தக்காளி பயிரிடுவது கணிசமாக குறைந்ததாலும், அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததாலும், ஜூன் மாத இறுதியில் வெளிச்சந்தையில் தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.100-120 வரை உயர்ந்தது. தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவின்படி, தக்காளி விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் கூட்டுறவுத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் படி, எனது தலைமையில் 27.06.2023 அன்று தலைமைச்செயலகத்தில் தக்காளியின் விலையேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு கூட்டுறவுத்துறையின் கீழ் சென்னையில் செயல்படும் 27 பண்ணைப்பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 2 நகரும் பண்ணைப்பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 28.06.2023 முதல் தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.60/- என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து ஜூலை முதல் வாரத்திலும் அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளியின் வரத்து குறைவாக இருந்ததால், வெளிச்சந்தையில் தக்காளியின் விலை
கட்டுக்குள் இல்லை. எனவே, மீண்டும் 03.07.2023 அன்று தலைமைச்செயலகத்தில் தக்காளியின் வெளிச்சந்தை விலையை கட்டுப்படுத்த ஆலோசனை கூட்டம்
நடத்தப்பட்டது. அதன்படி, சென்னையில் முதற்கட்டமாக வடசென்னையில் 32 நியாயவிலைக்கடைகளிலும் மத்திய மற்றும் தென் சென்னை நியாயவிலைக் கடைகளில்
தலா 25 என மொத்தம் 82 நியாயவிலைக்கடைகளிலும், மாநிலத்தில் பிற பகுதிகளில் 215 நியாயவிலைக்கடைகளிலும் என மொத்தம் 302 நியாய விலைக் கடைகள் மூலம்
04.07.2023 முதல் தக்காளி கிலோ ரூ.60/-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 28.06.2023 முதல் 05.07.2023 வரை சென்னையில் 15 மெட்ரிக் டன் தக்காளி
கொள்முதல் செய்யப்பட்டு பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Tap to resize

தற்போது, அண்டை மாநிலங்களில் பெய்த கனமழையினால் தக்காளி விளைச்சல் குறைந்ததால், தக்காளியின் வரத்து குறைந்து காணப்படுகிறது. இதனால் மீண்டும்
வெளிச்சந்தையில் தக்காளின் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் பதிப்படையாமல் தடுக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவுரையின்படி, தற்போது தமிழ்நாடு முழுவதும் தக்காளி விற்பனை 302 நியாயவிலைக்கடைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று முதல் தக்காளி விற்பனையை 500 நியாயவிலைக்கடைளுக்கு நீட்டிப்பு செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் 5 நியாயவிலைக் கடைகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 15 நியாயவிலைக் கடைகளிலும், சென்னை மாவட்டத்தில் 100
நியாயவிலைக் கடைகளிலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 20 நியாயவிலைக் கடைகளிலும், கடலூர் மாவட்டத்தில் 10 நியாயவிலைக் கடைகளிலும், தருமபுரி
மாவட்டத்தில் 10 நியாயவிலைக் கடைகளிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் 10 நியாயவிலைக் கடைகளிலும், ஈரோடு மாவட்டத்தில் 15 நியாயவிலைக் கடைகளிலும்,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 நியாயவிலைக் கடைகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 நியாயவிலைக் கடைகளிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 நியாயவிலைக் கடைகளிலும், கரூர் மாவட்டத்தில் 10 நியாயவிலைக் கடைகளிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 நியாயவிலைக் கடைகளிலும், மதுரை மாவட்டத்தில் 20 நியாயவிலைக் கடைகளிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 10 நியாயவிலைக் கடைகளிலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 10 நியாயவிலைக் கடைகளிலும், நாமக்கல் மாவட்டத்தில் 10 நியாயவிலைக் கடைகளிலும், நீலகிரி மாவட்டத்தில் 5 நியாயவிலைக் கடைகளிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் 10 நியாயவிலைக் கடைகளிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 நியாயவிலைக் கடைகளிலும், 

இராமநாதபுரம் மாவட்டத்தில் 10 நியாயவிலைக் கடைகளிலும், இராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 நியாயவிலைக் கடைகளிலும், சேலம் மாவட்டத்தில் 20 நியாயவிலைக் கடைகளிலும், சிவகங்கை மாவட்டத்தில் 5 நியாயவிலைக் கடைகளிலும், தென்காசி மாவட்டத்தில் 5 நியாயவிலைக் கடைகளிலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 15 நியாயவிலைக் கடைகளிலும், தேனி மாவட்டத்தில் 5 நியாயவிலைக் கடைகளிலும், திருச்சி மாவட்டத்தில் 20 நியாயவிலைக் கடைகளிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் 15 நியாயவிலைக் கடைகளிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 நியாயவிலைக் கடைகளிலும், திருப்பூர் மாவட்டத்தில் 10 நியாயவிலைக் கடைகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் 15 நியாயவிலைக் கடைகளிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 நியாயவிலைக் கடைகளிலும், திருவாரூர் மாவட்டத்தில் 5 நியாயவிலைக் கடைகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 15 நியாயவிலைக் கடைகளிலும், வேலூர் மாவட்டத்தில் 15 நியாயவிலைக் கடைகளிலும், விழுப்புரம் மாவட்டத்தில் 10 நியாயவிலைக் கடைகளிலும், விருதுநகர் மாவட்டத்தில் 10 நியாயவிலைக் கடைகளிலும் என தமிழ்நாடு முழுவதும் 500 நியாயவிலைக் கடைகளில் இன்று முதல் தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.60/- என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்த விலையேற்றத்திற்கு காரணம், விளைச்சல் குறைவு மற்றும் அண்டை மாநிலங்களில் வரத்து குறைவே ஆகும். இது ஒரு இயற்கையான விலையேற்றமே தவிர செயற்கையானது அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி தக்காளி விலையினை கட்டுக்குள் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

Latest Videos

click me!