Tamil Nadu Weather : தமிழகத்தில் மீண்டும் தீவிரமடையும் வடகிழக்குப் பருவமழை... இன்று இந்த மாவட்டங்களில் கனமழை கொட்டப்போகுது!

Published : Nov 26, 2026, 07:25 AM IST

Tamil Nadu Weather Update Today : தமிழ்நாட்டில் மீண்டும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

PREV
14
இன்றைய வானிலை நிலவரம்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 26 முதல் அடுத்த 7 நாட்களுக்கு தென் மாவட்டங்கள் மற்றும் வட கடலோரப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, நவம்பர் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மழையின்போது இடி, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மன்னார் வளைகுடா முதல் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் வரை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய சாதகமான வானிலை நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

24
இன்று 4 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு!

இன்று (நவம்பர் 26) மதுரை, திண்டுக்கல், கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இதுதவிர தென்காசி, தேனி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்தப் பகுதிகளில் மழையுடன் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றும் வீசக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், நீலகிரி, காஞ்சிபுரம், திருப்பூர், கோவை, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

34
நவம்பர் 27: 3 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்!

நாளை (நவம்பர் 27) கோவை, நீலகிரி, தேனி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இதனுடன் சென்னை, திருப்பூர், ஈரோடு, திருவள்ளூர், செங்கல்பட்டு, கரூர், திண்டுக்கல், விழுப்புரம், கடலூர், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 28ந் தேதியும் தொடரும் மழை!

நவம்பர் 28ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, நீலகிரி, விழுப்புரம், திருப்பூர், தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தென்காசி, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

44
அடுத்த ஒரு வாரத்திற்கு எப்படி இருக்கும் வானிலை?

வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பின்படி, நவம்பர் 29ஆம் தேதி வரை தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் வட கடலோர மாவட்டங்களிலும் மழைப்பொழிவு தொடர வாய்ப்புள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோரப் பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

இதற்கிடையில், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கமான அளவிலேயே நீடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இருக்காது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கான சூழல் நீடிக்க உள்ளதால், கனமழை வாய்ப்புள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வானிலை அறிவிப்புகளைக் கவனித்து அதற்கேற்ப முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

Read more Photos on
click me!

Recommended Stories